ஆஸ்திரேலிய தொடரில் இருந்தே இவரது பவுலிங் வேறலெவலில் உள்ளது – இளம்வீரரை புகழ்ந்த விராட் கோலி

Kohli
- Advertisement -

ஐபிஎல் தொடரின் பத்தாவது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட் செய்வதாக தீர்மானித்தார். அதன்படி விளையாடத் தொடங்கிய பெங்களூரு அணிக்கு 2வது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாவது ஓவரின் 2-வது பந்தில் கோலி 5 ரன்கள் எடுத்த நிலையிலும், பட்டிதார் 1 ரன் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.

varun 1

- Advertisement -

இதன் காரணமாக பெங்களூர் அணி 2 ஓவர்கள் முடிவில் 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. பின்னர் படிகல்லுடன் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி ஒருபக்கம் ரன்களை குவிக்க நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய படிக்கல் 25 ரன்களில் வெளியேறினார். அதன்பின்னர் மேக்ஸ்வெல் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரன்களை சேர்த்தனர். அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 49 பந்துகளில் 3 சிக்சர்கள் 9 பவுண்டரி என 78 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

இறுதி நேரத்தில் டிவில்லியர்ஸ் 34 பந்துகளை சந்தித்து 3 சிக்சர்கள் 9 பவுண்டரி என 76 ரன்கள் அடித்து அசத்த இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை குவித்து அசத்தியது. சென்னை மைதானத்திற்கு 160 ரன்களை வெற்றிக்கு போதுமான நிலையில் இவர்கள் 200 ரன்களை அடித்ததால் போட்டியின் முடிவு அங்கேயே உறுதிசெய்யப்பட்டது.

maxwell

அந்த வகையில் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை மட்டுமே எடுத்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அன்றே அதிகபட்சமாக ரசல் 31 ரன்களையும், மோர்கன் 29 ரன்களும் குவித்தனர். பெங்களூர் அணி சார்பாக ஜேமிசன் 3 விக்கெட்டுகளையும், சாஹல் 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் பட்டேல் 2 விக்கெட்களையும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் முக்கியமான 19-வது ஓவரை வீசிய பெங்களூர் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் 6 பந்துகளை வீசி ரசலுக்கு எதிராக ஒரு ரன்னை மட்டுமே விட்டுக் கொடுத்தார். அவரது இந்த சிறப்பான பவுலிங் குறித்து போட்டி முடிந்து பேசிய விராட் கோலி கூறுகையில் : சிராஜ் முக்கியமான நேரத்தில் ரசலுக்கு எதிராக மிகவும் சிறப்பாக பந்து வீசினார். கடந்த முறை நடைபெற்ற ஐபிஎல் போதும் ரசலுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி ரெக்கார்ட் வைத்துள்ளார்.

siraj

அதுமட்டுமின்றி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்தே சிராஜ் ஒரு துடிப்புடன் செயல்படுவதாகவும், அவர் அந்த தொடரில் இருந்து ஒரு மன உறுதி பெற்ற ஒரு பந்து வீச்சாளராக மாறி தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவளது பவுலிங் தற்போது அருமையாக உள்ளதாகவும் கோலி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement