நம்பமுடியாத சாதனை. நான் சந்தித்த மிகச்சிறந்த பவுலர்களில் நீங்களும் ஒருவர் – விராட் கோலி புகழாரம்

Kohli-4
- Advertisement -

இங்கிலாந்து நாட்டில் தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையுடன் மூன்றாவது போட்டியில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார்.

anderson 1

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் முதலிடத்தில் முரளிதரன் 800 விக்கெட்டுகள் உடனும், இரண்டாவது இடத்தில் வார்னே 708 விக்கெட்டுகள் உடனும், மூன்றாவது இடத்தில் இந்தியாவின் அணில் கும்ப்ளே 619 விக்கெட்டுகள் உடன் உள்ளனர். இந்நிலையில் இந்த வரிசையில் தற்போது வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் பாகிஸ்தானின் அசார் அலி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இணைந்துள்ளார்.

ஆம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 156 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் நேற்று தனது 600 ஆவது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார். 2003ஆம் ஆண்டு தனது கேரியரை ஆரம்பித்த ஆண்டர்சன் சுமார் 17 ஆண்டுகளாக விளையாடி இந்த சாதனையை படைத்துள்ளார். பொதுவாகவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு காயங்கள் அதிகமாக ஏற்படும். இருப்பினும் காயத்தினால் பல வலிகளை கடந்து இந்த சாதனையை அவர் எட்டியுள்ளார்.

anderson 2

இந்த தொடரின் முதல் போட்டியில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்த ஆண்டர்சனை ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று பலரும் விமர்சித்து இருந்தனர். ஆனால் இந்த வாரம் எனக்கு வெறுமையாக அமைந்துவிட்டது நான் நன்றாக பந்து வீசாததுதான் இதற்கு காரணம் கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற உணர்ச்சிவசப்படுவது இதுதான் முதல்முறை.

- Advertisement -

அடுத்து வரும் நாட்களில் கடினமாக உழைத்து எனது பார்மை மீட்டு எடுப்பேன் என்று கூறி தற்போது அதை நிரூபித்தும் காட்டினார் ஆண்டர்சன். அவர் சொன்னது போலவே தற்போது அடுத்தடுத்து ஆட்டங்களில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். ஆண்டர்சன் மூன்றாவது போட்டியில் மொத்தமாக 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதன்மூலம் 600 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்து மண்ணில் ஆண்டர்சனின் பந்துவீச்சு வேற லெவல் என்று ஜாம்பவான்கள் பாராட்டி வருகின்றனர். ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனைக் குறித்து விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘600 விக்கெட் என்ற நம்பமுடியாத சாதனையை எட்டிய ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு வாழ்த்துக்கள. நான் சந்தித்ததில் மிகவும் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜேம்ஸ் ஆண்டர்சன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement