ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் கொண்ட நாளாக நேற்றைய நாள் அமைந்தது. முதல் போட்டியில் பெங்களூரு அணியின் ராயல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. அதேபோல் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார் 20 ஓவர்கள் முடிவில் தட்டுத்தடுமாறி அந்த 154 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி எளிதாக வெற்றி பெற்றது.
பெங்களூரு அணி சார்பாக துவக்க வீரர் படிக்கல் மற்றும் கேப்டன் கோலி அரைசதம் அடித்தனர். இதன் காரணமாக 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டி குறித்து பேசிய விராட் கோலி கூறியதாவது…
இந்த ஆட்டத்தில் இரண்டு முக்கிய விஷயத்தை கவனித்தோம். கடந்த போட்டியில் எப்படி விளையாடினோமோ அப்படியே இந்த போட்டிகளில் விளையாட நினைத்தோம். அதன்படியே இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடி உள்ளோம். ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் தோல்விகளை சந்தித்து விட்டால் அடுத்தடுத்து அப்படியே தோல்விகளிலேயே தொடர் முடிந்துவிடும்.
மேலும் தேவ்தத் படிக்கள் எங்கள் அணிக்கு புதிதாக கிடைத்த மிகச் சிறந்த வீரர். அவரிடம் இன்னும் பல திறமைகள் ஒளிந்து இருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணம் அவர்தான். இந்த தொடரில் விளையாட்டையும், வெற்றியையும் அப்படியே தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார் விராட் கோலி.