உண்மையில் இவர் மனித சக்தியை மிஞ்சியவர். இவரால் மட்டுமே இப்படி பேட்டிங் செய்ய முடியும் – கோலி கூறியது யாரை தெரியுமா ?

Kohli-1
- Advertisement -

சார்ஜா மைதானத்தில் சில தினங்களுக்கு முன்னர் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொல்கத்தா அணி இந்த போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது. கடந்த சில வருடத்தில் பெங்களூரு அணி அதிகபட்சமாக அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற போட்டி இதுவாகும்.

RCBvsKKR

- Advertisement -

இந்த போட்டியில் விராட் கோலி 28 பந்துகளில் 33 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஆனால் ஏபி டிவிலியர்ஸ் 33 பந்துகளில் 5 பவுண்டரி 6 சிக்ஸர் அடித்து 73 ரன்கள் விளாசி இருந்தார். இந்த மைதானத்தில் அனைத்து பேட்ஸ்மேன்களும் தடுமாறினர். எந்த ஒரு பேட்ஸ்மேனாலும் இந்த மைதானத்தில் சரியாக ஆட முடியவில்லை.

ஆனால் ஏபி டி வில்லியர்ஸ் மட்டும் ருத்ர தாண்டவம் ஆடி 33 பந்துகளில் 73 ரன்கள் விளாசினார். இது குறித்து பேசிய பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது.. இந்த ஆடுகளும் மிகவும் வறண்டு போயிருந்தது. இரண்டாவதாக பந்துவீசும் போது அதில் ஈரம் இருக்காது என்று நினைத்து இருந்தோம்.

abd 1

ஆனால் மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஏபி டிவில்லியர்ஸ் போன்ற பேட்ஸ்மேனை தவிர வேறு யாரும் சரியாக இந்த ஆடுகளத்தில் ஆட முடியவில்லை. மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் திணறினர். 165 ரன்கள் தான் வரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் போது 194 ரன்கள் வந்ததற்கு யார் காரணம் என்று நம் அனைவருக்கும் தெரியும்.

abd

அவரது ஆட்டம் நம்பமுடியாத ஒரு ஆட்டம் என்று தெரிவித்துள்ளார் விராட் கோலி. உண்மையில் நிச்சயம் இது ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றுதான். ஏனெனில் தொடரில் முழு போட்டிகளும் குறிப்பிட்ட 3 மைதானங்களில் மட்டுமே நடைபெறுவதால் மைதானம் ஸ்லோ ஆகியுள்ளதை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஏ.பி.டி யின் ஆட்டம் நம்ப முடியாத ஒன்றுதான்.

Advertisement