நேற்றைய போட்டியில் பங்கேற்றதன் மூலம் விராட் கோலி படைத்திருக்கும் தனித்துவ சாதனை – விவரம் இதோ

Kohli
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் தற்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. இது ஐசிசி நடத்தும் தொடர் என்பதால், இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று எந்த அணி ஐசிசி கோப்பையை கைப்பற்றப் போகிறது என்பதைக் காண உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலோடு இருக்கின்றனர். இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டானாக செயல்பட்டு வரும் விராட் கோஹ்லி, ஒரு கிரிக்கெட் வீரராக மிகப் பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

kohli

- Advertisement -

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை யு19, ஒரு நாள், டி20 உலக கோப்பை தொடர்கள் மற்றும் சாம்பியன்ஷிப் ட்ராபி ஆகிய தொடர்கள்தான் ஐசிசியால் நடத்தப்பட்டு வந்தன. இந்த அனைத்து தொடர்களின் இறுதிப் போட்டியிலும் விளையாடி இருக்கும் விராட் கோஹ்லி, தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியிலும் விளையாடி இருப்பதால், ஐசிசி நடத்திய அனைத்து தொடர்களின் இறுதிப் போட்டியிலும் விளையாடிய ஒரே கிரிக்கெட் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

2008ஆம் ஆண்டு நடைபெற்ற யு19 கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படட் கோஹ்லி, யு19 உலக கோப்பையையும் கைப்பற்றி அசத்தியிருக்கிறார். அதற்குப் பிறகு 2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடிய அவர், அந்த இறுதிப் போட்டியில் சிறப்பான ஒரு பங்களிப்பையும் அளித்திருக்கிறார்.

kohli u19

2013ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஷ் ட்ராபி தொடரில், இங்கிலாந்து அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி சாம்பியன்ஷ் ட்ராபியை கைப்பற்றிய தோணி தலைமையிலான இந்திய அணியில் விராட் கோஹ்லியும் ஒரு முக்கிய வீரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

kohli

அதற்கடுத்த ஆண்டே (2014) பங்ளாதேஷில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விராட் கோஹ்லி அற்புதமாக ஆடி இருந்தாலும், அந்த போட்டியில் இந்திய அணியானது தோல்வியைத் தழுவியது. தற்போது முதல் முறையாக நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கும் இந்திய அணியை வழிநடத்தி வந்திருக்கும் விராட் கோஹ்லி, இந்த போட்டியில் வென்று ஐசிசி கோப்பையை கைப்பற்றுவரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement