ஓய்வுபெற்ற பவுலர்களில் இவருக்கு எதிராக நான் பேட்டிங் செய்ய ரொம்பவே திணறி இருப்பேன் – விராட் கோலி வெளிப்படை

Kohli
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கும் இந்திய டெஸ்ட் அணியின் வீரர்கள் அனைவரும் மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் கடந்த பத்து நாட்களாகவே தனிமைப் படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே இந்த தனிமை முகாமில் இருக்கும் இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிக்கெட் ரசிகர்களின் கேள்விக்கு சுவாரஸ்யமான பதில்களை அளித்து தனது நேரத்தை செலவழித்து வருகிறார்.

- Advertisement -

இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் விராட் கோலியிடம், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட வேகப் பந்து வீச்சாளர்களில், எந்த வீரர் உங்களை அதிகமாக தடுமாற வைத்திருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை ரசிகர் ஒருவர் எழுப்பினார். இந்த கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி, உலகின் தலைசிறந்த பௌலர்களில் ஒருவராக விளங்கிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம் தான் தன்னை அதிகமாக தடுமாற வைத்திருப்பார் என்று பதில் கூறியிருக்கிறார்.

தற்போதைய நவீன கிரிக்கெட்டின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டிலும், ஐபிஎல் தொடர்களிலும் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நிறைய முறை தடுமாறவே செய்திருக்கிறார். வேகப் பந்து வீச்சில் ஜாம்பவானான வாசிம் அக்ரம் ஒருவேளை இந்த கால கட்டத்தில் விளையாடி இருந்தார் என்றால், விராட் கோலி மற்றும் வாசிம் அக்ரம் என இருவருக்குமிடையே யார் பெரியவன் என்ற மிகப் பெரிய போட்டி இருந்திருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை

wasim akram

தனிமை முகாமில் இருக்கும் இந்திய வீரர்கள் அனைவரும் நாளை இங்கிலாந்துக்கு புறப்பட இருக்கின்றனர். அங்கு சென்ற பின்னர் மீண்டும் மூன்று நாட்கள் தனிமை முகாமில் இருக்கப்போகும் இந்திய வீரர்கள், அதற்கடுத்து வரும் நாட்களில் மைதானத்தில் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவர்கள் என எதிர்பர்க்கப்படுகிறது.

akram

மேலும் இந்திய ஆடவர் அணியுடன், மகளிர் கிரிக்கெட் அணியும் இங்கிலாந்திற்கு செல்லவிருப்பதால் இரு அணிகளும் ஒரே மாதிரியான கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement