WTC Final : அந்த சம்பவங்களை செஞ்ச அப்றம் தான் ஆஸ்திரேலியா அடங்கி இந்தியாவ மதிக்குறாங்க – விராட் கோலி மாஸ் பேட்டி

Virat-Kohli
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐசிசி 2023 டி20 சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தில் இருக்கும் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் 2021 முதல் நடைபெற்ற வந்த லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா 2வது இடம் பிடித்த இந்தியாவை எதிர்கொள்கிறது. ஐசிசி தரவரிசையில் டாப் 2 இடங்களில் இருக்கும் இவ்விரு அணிகளில் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி உட்பட உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்திருப்பதால் கோப்பையை வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

அதில் எப்போதும் ஐசிசி ஃபைனலில் வெற்றிகரமாக செயல்பட்டு 5 உலக கோப்பையும் டி20 உலக கோப்பையும் வென்று கிரிக்கெட்டின் வெற்றிகரமான அணியாக ஜொலிக்கும் ஆஸ்திரேலியா இந்த கோப்பையையும் முதல் முயற்சிலேயே வென்று சரித்திரம் படைக்க தயாராகியுள்ளது. மறுபுறம் கடந்த ஃபைனலில் விராட் கோலி தலைமையில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியிலிருந்து பாடத்தை கற்றுள்ள இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கி கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க போராட உள்ளது.

இந்தியாவ மதிக்குறாங்க:
அதை விட வலுவான ஆஸ்திரேலியாவை 2019/20, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் அவர்களுடைய சொந்த மண்ணிலேயே முதல் முறையாக தோற்கடித்து வரலாறு படைத்த இந்தியா சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலும் வீழ்த்திய தன்னம்பிக்கையுடன் இப்போட்டியில் களமிறங்குகிறது. இந்நிலையில் பொதுவாகவே எதிரணிகளை ஸ்லெட்ஜிங் செய்து கருணை காட்டாமல் விளையாடி தெறிக்க விடும் குணத்தைக் கொண்ட ஆஸ்திரேலியா அவர்களது சொந்த மண்ணில் அடுத்தடுத்த தொடர்களில் தோற்கடித்த பின்பு தான் இந்தியாவை மதிப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

indvsaus

குறிப்பாக 2019/20இல் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோற்கடித்த முதல் ஆசிய கேப்டன் என்ற சாதனை படைத்த அவர் 2020/21இல் 36க்கு ஆல் அவுட்டான பின் குழந்தை பிறப்புக்காக நாடு திரும்பினாலும் ரகானே தலைமையில் கொதித்தெழுந்த இந்தியா இளம் வீரர்களுடன் காபா கோட்டையை தகர்த்து மீண்டும் கோப்பையை வென்றது. அந்த வரலாற்று வெற்றிகளை பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் விராட் கோலி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கிடையேயான போட்டி என்பது ஆரம்ப காலங்களில் உச்சமாக இருக்கும். குறிப்பாக அந்த காலங்களில் பதற்றமான சூழ்நிலைகள் இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் நாங்கள் 2 தொடர்களை வென்ற பின் அந்தப் போட்டி தற்போது மரியாதையாக மாறியுள்ளது. அதாவது ஒரு டெஸ்ட் அணியாக எங்களை அவர்கள் தற்போது குறைத்து மதிப்பிடுவதில்லை. அதனால் எதிரணியில் எங்களுக்கு கிடைக்கும் மரியாதையை பார்க்க முடிகிறது”

Virat Kohli

“அதே சமயம் வெற்றிக்காக அவர்களது சொந்த மண்ணில் இந்தியா கடுமையாக போராடுவதை ஆஸ்திரேலியா விரும்புகின்றனர். அந்த வகையில் எங்களை இப்போது எந்த எதிரணியும் குறைத்து மதிப்பிடுவதில்லை. பொதுவாக ஆஸ்திரேலியா அதிக போட்டியை கொடுக்கும் அணியாகும். குறிப்பாக நீங்கள் சிறிய இடைவெளி கொடுத்தாலும் அதை பயன்படுத்தி அவர்கள் உங்களை அடித்து வெற்றி பெற்று விடுவார்கள். அவர்களுடைய நுணுக்கங்கள் மிகவும் உயரியது. அது தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்த கட்டத்துக்கு சென்று சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உத்வேகத்தை எனக்கு கொடுக்கிறது. அதனால் ஆஸ்திரேலியாவை வீழ்த்த என்னுடைய செயல்பாடுகளை நானும் உயர்த்த வேண்டும்”

இதையும் படிங்க:WTC Final : வலைப்பயிற்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய ரோஹித் சர்மா. என்ன நடந்தது? – இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

“மேலும் இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சூழ்நிலைகள் இருக்காது. நீங்கள் இப்போட்டியில் களமிறங்கியதும் உடனடியாக அதற்கேற்றார் போல் உங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஒரே ஒரு போட்டியில் எந்த அணி தங்களை விரைவாக உட்படுத்திக் கொள்கிறதோ அவர்களே வெற்றி காண்பார்கள். அது தான் பொதுவான மண்ணில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அழகாகும்” என்று கூறினார்.

Advertisement