அவர் மட்டும் இல்லனா இந்த லெவலுக்கு வந்துருக்க மாட்டேன் – தோனி நட்பை பற்றி பல அறியாத விஷயங்களை பகிர்ந்த விராட் கோலி

Kohli dhoni
- Advertisement -

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 2008 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று கொடுத்து சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானாலும் ஆரம்ப காலங்களில் தடுமாறினார். அதனால் அவரை நீக்குமாறு அந்த சமயங்களில் விமர்சனங்கள் இருந்தாலும் தொடர்ந்து வாய்ப்பளித்த அப்போதைய கேப்டன் தோனி 2013 முதல் தமது அணியில் துணை கேப்டனாகவும் செயல்படும் வாய்ப்பை கொடுத்தார். அந்த வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்தி நாளடைவில் சச்சினுக்கு பின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்த விராட் கோலியின் கேப்டன்ஷிப் பண்புகளை உணர்ந்த தோனி 2014இல் டெஸ்ட் கேப்டன்ஷிப் பொறுப்பை ஒப்படைத்து ஓய்வு பெற்றார்.

- Advertisement -

மேலும் 2017இல் யாருமே எதிர்பாராத வகையில் வெள்ளை பந்து கேப்டன்ஷிப் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்து அவரது தலைமை சாதாரண கிரிக்கெட் வீரராக விளையாடிய தோனி 2019 உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார். அந்த வகையில் தன்னுடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக திகழும் தோனியை எப்போதுமே விராட் கோலி பாராட்டுவதற்கு தவறுவதில்லை. குறிப்பாக 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக அணியிலிருந்து நீக்குமாறு பெரும்பாலான முன்னாள் வீரர்கள் விமர்சித்த போது தோனி மட்டும் தான் தமக்கு மெசேஜ் செய்து ஆதரவு கொடுத்ததாக ஏற்கனவே விராட் கோலி தெரிவித்திருந்தார்.

தோனி – விராட் நட்பு:
இந்நிலையில் மோசமான காலங்களில் தனது மனைவி அனுஷ்காவுக்கு அடுத்தபடியாக தோனி தான் தமக்கு அதிக ஆதரவு கொடுத்துள்ளதாக மீண்டும் விராட் கோலி தெரிவித்துள்ளார். அத்துடன் அவருடைய வலது கை போல செயல்பட்டதாக தெரிவிக்கும் விராட் கோலி ஓய்வுக்குப்பின் போன் செய்தால் தோனி 99% போனை எடுக்க மாட்டார் என்றும் கூறியுள்ளார். இது பற்றி ஆர்சிபி இணையத்தில் அவர் பல ரசிகர்கள் அறியாத விஷயங்களைப் பற்றி பேசியது பின்வருமாறு.

kohli dhoni

“இந்த காலகட்டங்களில் எனக்கும் தோனிக்கும் எந்த அருவருப்பும் ஏற்பட்டதில்லை. உண்மை என்னவெனில் தோனி என்னை தேர்ந்தெடுத்தார். அவர் என்னை தனது சிறகுகளின் கீழ் அழைத்துச் சென்றார். மேலும் 2012 முதல் அவரிடமிருந்து கேப்டன் பதவியை ஏற்கப்போகும் ஒரு பையனாக அவர் என்னை வளர்த்தார். நான் அவருடைய துணை கேப்டனாக இருந்தேன். அப்போதெல்லாம் களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நான் எப்போதும் அவரிடம் விவாதிப்பேன்”

- Advertisement -

“நான் எப்போதும் அவருக்கு வலது கையாக இருந்தேன். மேலும் நான் இந்தியாவுக்காக நிறைய மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை விளையாடியதால் எனக்கும் தன்னம்பிக்கை ஏற்பட்டது. நானும் களத்தில் தோனிக்கு நிறைய ஐடியாக்களை கொடுத்தேன். குறிப்பாக மற்றவர்களைப் போல் களத்தில் நின்று பீல்டிங் செய்து பந்தை எடுத்துப் போடுபவராக மட்டும் நான் இருக்கவில்லை”

Kohli

“மாறாக அழுத்தமான சூழ்நிலைகள் ஏற்பட்ட போது நானும் என்னுடைய சில ஐடியாக்களை அவருக்கு கொடுத்தேன். மேலும் களத்தில் விளையாடும் போது எப்போதும் ஸ்கோர் போர்டை பார்த்து இவ்வளவு ரன்கள் இருக்கிறதா? என்று பார்ப்பதில்லை. மாறாக பிட்ச் எவ்வாறு செயல்படுகிறது சூழ்நிலைகள் எவ்வாறு இருக்கிறது எதிரணியின் பார்ட்னர்ஷிப்பை எவ்வாறு உடைக்கலாம் என்பதில் கவனம் செலுத்தினேன். எனது இது போன்ற செயல்பாடுகளை தோனியும் ஆரம்பத்திலேயே புரிந்து கொண்டார். அதனால் எங்களுக்கிடையேயான உறவு சமூகமாக இருந்தது”

- Advertisement -

“அவர் மீது அப்போதும் இப்போதும் எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது. ஏனெனில் அவர் இந்தியாவுக்காக நீண்ட நாட்கள் கேப்டனாகவும் வீரராகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் என் மீது எப்போதும் அதிக நம்பிக்கை வைத்துள்ளார். அந்த உரிமையில் நான் அவரிடம் எங்கும் எப்போதும் எதைப் பற்றியும் நேரடியாக பேசுவேன். அவர் நம்மை தொடர்பு கொள்வது போல நாம் அவரை எளிதாக தொடர்பு கொள்ள முடியாது. சாதாரண நாட்களில் நீங்கள் அவருக்கு போன் செய்தால் 99% அவர் எடுக்க மாட்டார். ஏனெனில் அவர் எப்போதும் போனை கையில் வைத்திருக்கும் நபரல்ல”

இதையும் படிங்க: உங்கட்ட பணம் இருந்தாலும் எங்ககிட்ட அது இருக்கு, என்ன ஆனாலும் அது மட்டும் நடக்காது – இந்தியாவுக்கு கம்ரான் அக்மல் பதிலடி

“சொல்லப்போனால் அவரது ஓய்வுக்கு பின் 2 முறை மட்டுமே அவரை தொடர்பு கொண்டுள்ளேன். அதில் ஒரு முறை “நீங்கள் வலுவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் போது நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை அனைவரும் கேட்க மறந்து விடுவார்கள்” என்று எனக்கு அனுப்பிய மெசேஜ் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தி ஃபார்முக்கு திரும்ப உதவியது. எனவே அவருடைய நட்பை பெற்றுள்ளது எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாகும்” என்று கூறினார்.

Advertisement