ரோஹித்தும் நானும் இந்தியாவுக்காக செய்ய நினைச்சோம்.. என் சந்தேகத்தை தீத்துட்டேன்.. விராட் கோலி பேட்டி

Virat Kohli
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது. டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 271 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக குவிண்டன் டீ காக் 106 ரன்களை எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.

அடுத்து விளையாடிய இந்தியா அதிரடியாக விளையாடி 39.5 ஓவரிலேயே 271/1 ரன்களை குவித்து எளிதாக வென்றது. அதனால் 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்ற இந்தியா கடந்த வாரம் டெஸ்ட் தொடரில் படுதோல்வியை பரிசளித்த தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் சதத்தை அடித்து 116*, ரோஹித் சர்மா 75, விராட் கோலி 65* ரன்கள் குவித்து அசத்தினார்கள்.

- Advertisement -

தொடர்நாயகன் கோலி:

இத்தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு 135, 102, 75* ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய விராட் கோலி தொடர்நாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இப்போட்டியில் ஸ்பெஷலாக இந்தியாவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து தாமும் ரோஹித் சர்மாவும் விளையாடியதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். மேலும் சமீப காலங்களில் தன்னுடைய ஆட்டத்தின் மேலிருந்த சந்தேகம் இத்தொடரில் வெளிப்படுத்திய ஆட்டத்தால் தீர்ந்ததாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது பற்றி விராட் பேசியது பின்வருமாறு. “இந்தத் தொடரில் நான் விளையாடிய விதம் எனக்கு மிகவும் திருப்தியளிக்கிறது. மனம் மிகவும் பாரமற்றதாக உணர்கிறது. அனைத்தும் சேர்ந்து வருவதாக தோன்றுகிறது. நான் என்னுடைய சொந்தத் தரத்தை நிர்வகித்து தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறேன். நீண்ட நேரம் பேட்டிங் செய்யும் நான் சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் விளையாடுகிறேன்”

- Advertisement -

சந்தேகம் தீர்ந்தது:

“15 – 16 வருடங்கள் விளையாடும் நீங்கள் உங்கள் மீதே சந்தேகிக்கக்கூடிய சூழல்கள் வரும். குறிப்பாக பேட்டிங்கில் ஒரு தவறு உங்களை பாதிக்கும் போது அது உங்களுக்கு பதற்றத்தை உண்டாக்கும். கிரிக்கெட்டில் என்னுடைய மொத்த பயணமும் ஒரு சிறந்த நபராக மாறுவதைப் பற்றியதாகும். எதிர்மறையான சிந்தனைகளைப் பற்றி உணர்ந்த நான் அதில் வேலை செய்வது என்னுடைய சுபாவத்தை கையாள உதவுகிறது”

“இப்போதும் என்னுடைய அணிக்காக பங்காற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சுதந்திரமாக விளையாடும் போது என்னால் சிக்ஸர்களை பறக்க விட முடியும் என்பது எனக்குத் தெரியும். ராஞ்சியில் நடைபெற்ற முதல் போட்டியில் வெளிப்படுத்தியது இந்தத் தொடரில் என்னுடைய ஆட்டங்களில் சிறந்தது. ஏனெனில் ஆஸ்திரேலியாவில் விளையாடிய பின் நான் எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை”

- Advertisement -

ரோஹித் – கோலி ஜோடி:

“அது நீண்ட காலம் நான் உணராத என்னைத் திறந்தது. இந்த 3 போட்டிகளும் எப்படி சென்றது என்பதில் நன்றியுடையவனாக இருக்கிறேன். 1 – 1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் இருந்ததால் நிச்சயம் நன்றாக வேண்டிய நிலை உருவானது. அது போன்ற சூழ்நிலைகளே எங்களது (ரோஹித்) சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருகிறது. நாங்கள் எங்களுடைய அணிக்காக ஏதேனும் ஸ்பெஷலாக செய்ய விரும்பினோம்”

இதையும் படிங்க: 39.5 ஓவரிலேயே தெ.ஆவை முடித்த இந்தியா பதிலடி வெற்றி.. தோனியின் உலக சாதனையை சமன் செய்த கோலி

“அதையே நாங்கள் நீண்ட காலமாக செய்துள்ளோம். அதனாலேயே எங்களால் நீண்ட காலம் விளையாட முடிந்தது. நாங்கள் எப்போதும் அணிக்கு என்னத் தேவையோ அதற்குத் தகுந்தார் போல் எங்களை சீரமைக்கிறோம். இப்போதும் ரோஹித்தும் நானும் அணியின் வெற்றிக்காக உதவி செய்வதில் மகிழ்ச்சி” என்று கூறினார்.

Advertisement