- Advertisement -
ஐ.பி.எல்

26/3ன்னு ஆர்சிபி விழுந்தப்போ.. இந்த திட்டத்தை வெச்சு தான் ஜெய்க்க வெச்சேன்.. கிங் கோலி பேட்டி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற்ற 46வது போட்டியில் டெல்லியை 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி 163 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகப்பட்சமாக அபிஷேக் போரேல் 28, கேஎல் ராகுல் 41, ஸ்டப்ஸ் 34 ரன்கள் எடுத்தனர்.

அடுத்ததாக விளையாடிய பெங்களூரு அணியும் ஜேக்கப் பேத்தல் 12, படிக்கல் 0, கேப்டன் ரஜத் படிதார் 6 ரன்னில் அவுட்டானதால் 26/3 என ஆரம்பத்திலேயே திணறியது. ஆனால் அப்போது விராட் கோலி நங்கூரமாக விளையாடி 51 (47) ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் சேர்ந்து 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பாண்டியா 73* (47) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார்.

- Advertisement -

சேஸ் மாஸ்டர்:

இறுதியில் டிம் டேவிட் 19* (5) ரன்கள் எடுத்ததால் 18.3 ஓவரிலேயே 165/4 ரன்களை எடுத்த பெங்களூரு தங்களுடைய ஏழாவது வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை நெருங்கியது. இந்நிலையில் 26/3 என தடுமாறிய போது இலக்கு, பவுலர்கள் மற்றும் சூழ்நிலைகளைப் பார்த்து விளையாடியதாக விராட் கோலி கூறியுள்ளார். மேலும் சிங்கிள், டபுள் போன்ற ரன்களை எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்றி வெற்றியில் பங்காற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.

அந்த வகையில் சேஸ் மாஸ்டர் என்பதை நிரூபித்த விராட் கோலி இது பற்றி பேசியது பின்வருமாறு. “இப்படிப்பட்ட பிட்ச்சில் இது டாப் வெற்றி. டெல்லியில் நடைபெற்ற சில போட்டிகளை நாங்கள் பார்த்தோம். அதில் இந்த பிட்ச் மற்றவற்றைக் காட்டிலும் வித்தியாசமாக இருந்தது. சேசிங் துவங்கும் போது நாங்கள் போட்டியில் இருக்கிறோமா? என்னுடைய வேலை என்ன?”

- Advertisement -

சேசிங் திட்டம் என்ன:

“நான் எப்படிப்பட்ட ஆட்டத்தை விளையாட வேண்டும் என்பதை ஃபெவிலியனைப் பார்த்து சோதனை செய்து கொள்வேன். 26/3 என சரிந்த போது நாங்கள் அழுத்தத்தில் இருந்தோம். அப்போது நானும் பாண்டியாவும் சதம் பார்ட்னர்ஷிப் அமைத்தோம். பேட்டிங்கில் அவர் அபாரமாக செயல்பட்டார். பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அவர் இந்தத் தொடரில் பேட்டிங்கிலும் வந்து அசத்துவதற்காக நாங்கள் காத்திருந்தோம்”

இதையும் படிங்க: என்னால் முடியாதப்போ.. இதை சொல்லி அடிக்க வெச்ச விராட் கோலியை பாராட்டுங்க.. ஆட்டநாயகன் க்ருனால் பேட்டி

“இன்றைய நாள் அவருடையது. அதில் அவர் புத்திசாலித்தனமாக செயல்பட்டார். சேசிங் செய்கையில் ஸ்கோரை பார்த்து, சூழ்நிலைகள் மற்றும் யார் பவுலிங் செய்யப் போகிறார்கள்? அதில் யார் கடினமாக இருக்கப் போகிறார்கள்? என்பதை அறிந்து விளையாடுவேன். சிங்கிள் டபுள் எடுப்பதை நிறுத்தக்கூடாது என்றும் முயற்சிப்பேன். அதற்கிடையே பௌண்டரிகள் அடிக்க வேண்டும். அப்போது தான் போட்டி தேங்கி நிற்காது. அதே போல ஸ்ட்ரைக்கை மாற்றுவதிலும் எனது கவனம் இருக்கும்” என்று கூறினார்.

- Advertisement -