- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா – பாகிஸ்தான் ஃபைனல் மட்டுமே அதுக்கு சமமாக இருக்கும்.. லண்டனில் விராட் கோலி பேட்டி

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றார். அதற்கு முன்பாக டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற அவர் இனிமேல் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடப் போகிறார். இந்நிலையில் இங்கிலாந்தின் லண்டனில் வரலாற்றுச் சிறப்புமிக்க விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

அந்தப் போட்டிகளை விராட் கோலி தம்முடைய மனைவி அனுஷ்காவுடன் சேர்ந்து நேற்று பார்த்தது சமூக வலைதளங்களில் வைரலானது. அவரிடம் விம்பிள்டனில் விளையாடுவது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதைப் போன்ற அழுத்தத்தை கொடுக்குமா என்ற செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அதிக ரசிகர்கள் கொண்ட மைதானத்தில் எங்கே விளையாடினாலும் அழுத்தம் ஏற்படும் என்று விராட் கோலி பதிலளித்தார்.

- Advertisement -

லண்டனில் கோலி:

ஆனால் விம்பிள்டன் தொடரில் மதியப்பகுதி களத்தில் விளையாடுவது அதிக அழுத்தத்தைக் கொடுக்கும் என்று விராட் கோலி தெரிவித்தார். அது உலகக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் விளையாடுவதைப் போன்ற அழுத்தத்தைக் கொடுக்கும் என்றும் விராட் கோலி கூறினார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட்டில் நீங்கள் விளையாடும் போது உலகம் முழுவதிலும் சில அற்புதமான மைதானங்கள் இருக்கும்”

“ஆம், மைதானத்தில் இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை காரணமாக அழுத்தம் இருக்கும். ஆனால் அது இங்குள்ள மத்திய களத்தை போல் பயமுறுத்துவதாக இருக்காது என்று சொன்னேன். அதற்கு முக்கிய காரணம் இடைவெளி. கிரிக்கெட்டில் நாங்கள் விளையாடும் போது ரசிகர்கள் நீண்ட தொலைவில் இருப்பார்கள். எனவே அவர்களுடைய கருத்துக்களைப் பற்றி கவலைப்படாமல் உங்களுடைய கவனத்தை இழக்காமல் விளையாட முடியும்”

- Advertisement -

இந்தியா – பாகிஸ்தான் மாதிரி:

“உங்களை நோக்கி பந்து வரும், அதற்கு நீங்கள் பதில் கொடுக்க வேண்டும். பவுண்டரி எல்லை அருகே ஃபீல்டிங் செய்யும் போது மட்டுமே அவர்களுடைய பேச்சுக்களைக் கேட்க முடியும். அப்போதும் உடனடியாக உங்கள் மேலே அழுத்தம் வராது. ஆனால் டென்னிஸ் போட்டியில் அனைத்தும் ஒரு புள்ளியில் இருக்கும். போட்டி உடனடியாக மாறக்கூடும். மத்திய களத்தில் விளையாடும் போது அதிகப்படியான அழுத்தத்தை சந்திக்க வேண்டும்”

இதையும் படிங்க: 3 வருட பஸ்பாலுக்கு உண்மையான சவால் இந்தியா.. ஸ்டோக்ஸ் இந்த 2 மாற்றத்தை செய்யனும்.. ஆதர்டன் அட்வைஸ்

“அவற்றையெல்லாம் மனதளவில் சமாளித்து பொறுமையுடன் நல்ல ஃபிட்னஸ் கடைபிடித்து நீண்ட நேரம் விளையாடும் டென்னிஸ் வீரர்கள் மேலே எனக்கு நிறைய மரியாதை இருக்கிறது. இங்குள்ள அழுத்தம் என்பது கிரிக்கெட்டில் உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அல்லது உலகக்கோப்பை நாக் அவுட் போட்டிக்கு நிகராக இருக்கும் என்று சொல்வேன். அங்கே அழுத்தத்தால் உங்களுடைய கால்கள் நடுங்கும். ஆனால் டென்னிஸ் வீரர்கள் காலிறுதி முதலே அது போன்ற அழுத்தத்தை எதிர்கொள்வது அபாரமானது” என்று கூறினார்.

- Advertisement -