இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டியில் 5 சதங்கள் அடித்தும் இந்தியாவை தோற்கடித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் அதற்கெல்லாம் அசராத சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி அடுத்தப் போட்டியிலேயே 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து தொடரை சமன் செய்துள்ளது.
குறிப்பாக பஸ்பால் என்ற பெயரில் எந்த இலக்கை கொடுத்தாலும் சேசிங் செய்வோம் என்று இங்கிலாந்து அணியினர் சவால் விட்டனர். அப்படிப்பட்ட இங்கிலாந்திடம் 608 ரன்களை சேசிங் செய்து காட்டுமாறு சவால் விட்டு வீழ்த்திய இந்தியா பர்மிங்காமல் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணியாக சாதனை படைத்தது. அடுத்ததாக 3வது போட்டி ஜூன் 10ஆம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
உண்மயான சவால்:
இந்நிலையில் தனது கேப்டன்ஷிப் கேரியரில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் அடுத்தப் போட்டியில் தான் பென் ஸ்டோக்ஸ் இந்தியாவிடம் உண்மையான சவாலை சந்திக்கப் போகிறார் என்று மைக்கேல் ஆதர்டன் தெரிவித்துள்ளார். அந்தப் போட்டியில் வெற்றி பெற இங்கிலாந்து அணியில் 2 மாற்றங்கள் நிகழ்த்தப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி ஆதர்டன் பேசியது பின்வருமாறு.
“பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்தின் கேப்டனாக செயல்பட்ட 3 வருடங்களில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் அடுத்தப் போட்டி மிகப்பெரிய சவாலாக இருக்கும். அங்கே எப்படி அவர் தன்னுடைய அணியின் உத்வேகத்தை உயர்த்தப் போகிறார் என்பது கடினமாக இருக்கும். இது அவருடைய கேப்டன்ஷிப் மற்றும் மனநிலை ஆகியவற்றுக்கு வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சோதனையாகும்”
தேவையான 2 மாற்றங்கள்:
“ஏனெனில் முதல் போட்டிக்கும் 3வது போட்டிக்கும் 7 நாட்கள் இடைவெளி இருந்தது. ஆனால் அடுத்தப் போட்டி 3 நாட்களில் துவங்குகிறது. 2வது போட்டியில் அவருடைய பணிச்சுமை ஒரே மாதிரியாக இல்லை. மைதானத்தில் 25 ஓவர்கள் அதிக நேரம் செலவிட்ட அவர் 9 ஓவர்கள் குறைவாக வீசினார். 16 நிமிடங்கள் குறைவாக பேட்டிங் செய்தார். ஆனாலும் தோல்வி விஷயங்களை மோசமாக்குகிறது”
இதையும் படிங்க: 10க்கு 10 மார்க்.. ப்ராட்மேன் மாதிரி இதை செஞ்சு சுப்மன் கில் இந்தியாவை தூக்கிட்டாரு.. சாஸ்திரி பாராட்டு
“7 நாட்கள் இடைவெளி கிடைத்தும் சோர்வாக உணர்ந்த அவர் அடுத்த 3 நாட்களில் எப்படி உணரப்போகிறார்? என்பது கேள்வியாகும். இங்கிருந்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப பேட்டிங் மீது நம்பிக்கை வையுங்கள். ஜோஸ் டாங், பிரைடன் கார்ஸ் ஆகியோருக்கு பதிலாக கஸ் அட்கின்சன், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோரை விளையாட வைத்து நம்முடைய வேகப்பந்து வீச்சு துறையை புத்துணர்ச்சியாக மாற்றுங்கள்” என்று கூறினார்.



