10க்கு 10 மார்க்.. ப்ராட்மேன் மாதிரி இதை செஞ்சு சுப்மன் கில் இந்தியாவை தூக்கிட்டாரு.. சாஸ்திரி பாராட்டு

Ravi Shastri
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் 5 சதங்களை அடித்தும் பரிதாபமாக தோற்றது. ஆனால் அதற்கும் சேர்த்து இரண்டாவது போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா தொடரை சமன் செய்து இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. அத்துடன் பர்மிங்காம் மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்துள்ளது.

அந்த வெற்றிக்கு 269, 161 என ஒரே போட்டியில் 430 ரன்கள் அடித்து நிறைய சாதனைகளைப் புரிந்த கேப்டன் சுப்மன் கில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். கடந்த காலங்களில் அவர் வெளிநாடுகளில் பெரிய ரன்களை குவிக்கத் தவறியதால் கேப்டனாக அறிவிக்கப்பட்ட போது விமர்சனங்களை சந்தித்தார். தற்போது அந்த விமர்சனங்களுக்கு கேப்டனாகவும் அவர் தக்க பதிலடி கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

10க்கு 10 மார்க்:

இந்நிலையில் 1 – 0 என பின் தங்கியிருந்த இந்தியாவை டான் பிராட்மேன் போல விளையாடி சுப்மன் கில் தூக்கி நிறுத்தியதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். மேலும் விராட் கோலி போல் ஃபுல் ஷாட்டுகளை அடிக்கும் திறமைக் கொண்டுள்ள கில் ஜாம்பவான் சச்சின் போன்ற கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி சாஸ்திரி பேசியது பின்வருமாறு.

“இது ஒரு கேப்டனிடமிருந்து வெளிப்பட வேண்டிய 10க்கு 10 மதிப்பெண்கள் நிறைந்த செயல்பாடுகள். ஒரு கேப்டனிடமிருந்து இதை விட நீங்கள் எதையும் கேட்க முடியாது. 1 – 0 என்ற கணக்கில் இந்தியா கீழே இருந்த போது அவர் பிராட்மேன் போல பேட்டிங் செய்து 269, 161 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தார். அத்துடன் இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்தை திணறடிக்கக் கூடிய ஆகாஷ் தீப் போன்றவரை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்”

- Advertisement -

சாஸ்திரி பாராட்டு:

“வலைப்பயிற்சியில் ரகுவுடன் சேர்ந்து (பந்தை எறியும் பயிற்சயாளர்) அவர் 160 கி.மீ பந்துகளை எதிர்கொள்வதை பார்த்தேன். அதை கில் அடித்த நொறுக்கினார். விராட் கோலிக்கு பின் அவரைத் தவிர்த்து வேறு இந்திய பேட்ஸ்மேன்கள் அப்படி ஃபுல்லிங் செய்து பார்த்ததில்லை. இந்தப் பையன் விராட் கோலியை அருகிலிருந்து பார்த்து பயிற்சிகளை எடுத்துள்ளார்”

இதையும் படிங்க: விமர்சித்த நானே பாராட்டுறேன்.. நினைக்காததை செய்த கில்.. விராட் மாதிரி இருக்க தேவையில்ல.. நாசர் ஹுசைன்

“2019இல் கில்லை பார்த்த போது “பஞ்சாப்பிலிருந்து வந்துள்ள இந்தப் பையன் யார்? உடனடியாக அணியின் கலவைக்குள் கொண்டு வாருங்கள்” என்று என்னுடைய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரிடம் சொன்னேன். தேர்வாளர்களிடம் கேட்டு அவரை நாங்கள் அணியில் கொண்டு வந்தோம். ஏனெனில் அண்டர்-19 அளவில் அவர் சிறப்பாக விளையாடியிருந்தார். முதல் முறையாக நேரில் பார்த்த போது சச்சின் போன்ற கிளாஸ் அவரிடமும் இருந்தது தெரிந்தது. விராட் கோலி அவரை தனது தலைமையில் விளையாட தேர்ந்தெடுத்தார்” எனக் கூறினார்.

Advertisement