- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அந்த 2 சம்பவதுக்கு அப்றம் தான் ஆஸ்திரேலியர்கள் இந்தியாவை மதிக்குறாங்க.. குறைச்சு எடை போடல.. விராட் கோலி

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா முடி சூடா மன்னனாக அறியப்படுகிறது. ஏனெனில் பல அணிகள் ஒரு உலகக் கோப்பையை வெல்வதற்கே தடுமாறும் நிலையில் ஆஸ்திரேலியா அசால்டாக 6 கோப்பைகளை வென்று அலமாரியில் அடுக்கியுள்ளது. அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவது எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் என்றே சொல்லலாம்.

அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியும் காலம் காலமாக ஆஸ்திரேலிய மண்ணில் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்தது. ஆனால் அந்த மோசமான வரலாற்றை விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2018 – 19 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியாவில் வென்று மாற்றியது. அதனால் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற வரலாற்றை இந்தியா படைத்தது.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் வரலாறு:

அதற்கு பதிலடியாக 2020 – 21 தொடரின் முதல் போட்டியிலேயே இந்தியாவை 36க்கு ஆல் அவுட்டாக்கிய ஆஸ்திரேலியா வரலாறு காணாத தோல்வியை பரிசளித்தது. அப்போது விராட் கோலி இல்லாமலேயே ரகானே தலைமையில் கொதித்தெழுந்த இந்தியா 2 – 1 (4) என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலியாவில் கோப்பையை வென்றது. அதனால் ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்த தொடர்களை வென்ற முதல் ஆசிய அணியாகவும் இந்தியா வரலாறு படைத்துள்ளது.

இந்நிலையில் அடுத்தடுத்த தொடர்களை வென்ற பின்பே ஆஸ்திரேலிய அணியினர் இந்தியாவுக்கு உண்மையான மரியாதையை கொடுப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். மேலும் சொந்த மண்ணில் அடுத்தடுத்த தோல்விகளை கொடுத்ததால் இப்போதெல்லாம் இந்திய அணியை ஆஸ்திரேலியா குறைத்து மதிப்பிடுவதில்லை என்றும் விராட் கோலி கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ஆஸ்திரேலியா மதிக்குறாங்க:

“ஆரம்ப வருடங்களில் எங்களுக்கிடையேயான போட்டி மிகவும் தீவிரமாக இருந்தது. மிகவும் பதற்றமான சூழல் இருந்தது. ஆனால் நாங்கள் அங்கே 2 முறை தொடரை வென்ற பின் அந்தப் போட்டி தற்போது மரியாதையாக மாறியுள்ளது என்று நினைக்கிறேன். தற்போது ஆஸ்திரேலியாவில் நாங்கள் ஒரு சாதாரண டெஸ்ட் அணியாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதனால் ஆஸ்திரேலியாவில் விளையாடும் போது ஒரு மரியாதை கிடைப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்”

இதையும் படிங்க: வங்கதேச அணிக்கெதிரான டி20 தொடரில் சாதனை நிகழ்த்த காத்திருக்கும் ஹார்டிக் பாண்டியா – என்ன தெரியுமா?

“இந்தியா எங்களுடைய வீட்டிற்கு வந்து 2 முறை அடுத்தடுத்து தோற்கடித்த அணி என்று ஆஸ்திரேலியா மதிக்கிறது” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் மீண்டும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் இந்தியா விளையாட உள்ளது. அதில் ரோஹிர் சர்மா தலைமையில் களமிறங்கி ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -