அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருடன் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 வடிவிலான போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்ததால் அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் புதிய பயிற்சியாளரான கௌதம் கம்பீர் சூர்யகுமார் யாதவ் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதால் அவரை புதிய டி20 கேப்டனாக அறிவித்து இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட வைத்தார்.
ஹார்டிக் பாண்டியா நிகழ்த்தவுள்ள சாதனை :
அந்த தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து தற்போது வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாகவும் சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே வேளையில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக பார்க்கப்படும் ஹார்டிக் பாண்டியா இந்த வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அந்த வகையில் எதிர்வரும் இந்த வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் மூன்று போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகளை அவர் வீழ்த்தும் பட்சத்தில் இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஹார்டிக் பாண்டியா நிகழ்த்த காத்திருக்கிறார்.
இதுவரை இந்திய அணிக்காக அதிக விக்கெடுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளராக புவனேஸ்வர் குமார் முதலிடத்தில் இருக்கிறார். இதுவரை 87 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள அவர் 90 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருக்கிறார்.
அதற்கடுத்து ஹார்டிக் பாண்டியா 102 டி20 போட்டிகளில் விளையாடி 86 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் புவனேஸ்வர் குமாரை தாண்டி அதிக விக்கெட்டுகளை டி20 போட்டிகளில் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.
இதையும் படிங்க : விராட் கோலி கிடையாது.. தற்போதைக்கு இவர்தான் ஆல் பார்மேட் பெஸ்ட் பேட்ஸ்மேன் – தினேஷ் கார்த்திக் பதில்
ஒட்டுமொத்தமாக அதிக டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பட்டியலில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 96 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த கையோடு அதற்கடுத்து இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய பாண்டியா அதன் பின்னர் தற்போது இரண்டு மாத ஓய்வுக்கு பின்னர் வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளார். இதன் காரணமாக தற்போது பாண்டியா தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



