எனக்கே பிடிக்கல.. சிலருக்கு பிடிக்கலனாலும் அவங்களுக்கு பிடிப்பதால் இதை செய்றேன்.. விராட் கோலி பேட்டி

Virat Kohli 2
- Advertisement -

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நவீன கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார். முன்னதாக களத்தில் எப்போதுமே விராட் கோலி மிகவும் துடிதுடிப்பாக செயல்பட்டு வெற்றிக்காக போராடக் கூடியவராக அறியப்படுகிறார். குறிப்பாக ஒரு சாதாரண விக்கெட் விழுந்தால் கூட அதை அவர் அந்த விக்கெட் எடுத்த பவுலரை விட வெறித்தனமாக கொண்டாடுவதில் பெயர் போனவர்.

அதே போல சக வீரரை எதிரணியினர் வம்பிழுத்தால் அதற்கு அஞ்சாமல் அவர்களிடம் நேராக சென்று பதிலடி கொடுப்பதற்கும் அவர் எப்போதும் தயங்கியதில்லை. எடுத்துக்காட்டாக கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 19 வயது இளம் வீரர் சாம் கோன்ஸ்டஸ் இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ராவை அதிரடியாக எதிர்கொண்டு சவால் கொடுத்தார். அதற்கு களத்திலேயே அவருடைய தோளில் இடித்து நேருக்கு நேராக விராட் கோலி பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

ஆக்ரோசம் அவசியம்:

அதற்காக ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அவரை கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக ஒரு ஆஸ்திரேலிய பத்திரிக்கை விராட் கோலியை கோமாளி போல முதல் பக்கத்தில் சித்தரித்தது. அதற்கும் அஞ்சாத விராட் கோலி கடைசிப்போட்டியில் “உங்களைப் போல் பாக்கெட்டில் உப்புக்காகிதத்தை வைத்து பந்தை தேய்த்து ஏமாற்றுபவன் நான் அல்ல” என்று சைகையில் ஆஸ்திரேலியர்களுக்கு பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் அப்படி களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவது சிலருக்கு பிடிக்காவிட்டாலும் பல ரசிகர்களுக்கு பிடிப்பதாக விராட் கோலி கூறியுள்ளார். எனவே நாட்டுக்காக விளையாடும் போது அதை மகிழ்ச்சியுடன் செய்வதாக அவர் கூறியுள்ளார். அதே சமயம் சாம் கோன்ஸ்டஸ் தோளில் இடித்தது தமக்கே பிடிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

மக்களுக்கு பிடிக்குதே:

“எனக்கு எல்லை மீறி செல்லும் போக்குகள் உள்ளன. நான் அதிலிருந்து விலகிச் செல்வதில்லை. பலருக்கு இது அவர்களால் செயல்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்காது. ஆனால் என்னைப் பொறுத்த வரை அது சரியான நேரத்தில் சரியான நேரத்தில் வரக்கூடியதாக இருக்கும். எனது போட்டித்தன்மை கீழே செல்லாது. அதே சமயம் நீங்கள் தேவையின்றி அதை வெளிப்படுத்தக் கூடாது”

இதையும் படிங்க: சி.எஸ்.கே, மும்பை அணி எல்லாம் ஜாக்கிரதையா இருங்க.. லக்னோ அணியின் பலம் குறித்து பேசிய – ஆகாஷ் சோப்ரா

“அப்போதும் மனதளவில் நீங்கள் ஆக்ரோஷமாக இருக்க முடியும். சமீபத்தில் அவ்வாறு ஒன்றை நான் செய்தது சிறந்த விஷயம் இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் அவ்வாறு செய்ததில் எனக்கே சிறப்பாக இல்லை. அதற்காக சிலர் உங்களை விமர்சனம் செய்யலாம். ஆனால் விமர்சிப்பவர்களை விட நிறைய மக்கள் செய்வதை விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement