ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இழந்த இந்திய அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இதன் காரணமாக இந்திய அணியின் மீது பெரிய அளவில் விமர்சனம் எழுந்துள்ள வேளையில் வீரர்களின் மீதும் கடுமையான கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதிக்கப்பட்டு வருகின்றன.
ரஞ்சியில் விளையாட மறுத்த விராட் கோலி :
அந்த வகையில் இந்திய அணியின் பயிற்சியாளரான கௌதம் கம்பீர் இனி அணியின் எந்த ஒரு வீரராக இருந்தாலும் சரி, முழு உடற்தகுதியுடன் இருந்தால் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் இல்லையெனில் யாரை வேண்டுமானாலும் அணியில் இருந்து நீக்க தயார் என்று அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
இதன் காரணமாக இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பலரும் எதிர்வரும் ரஞ்சி தொடரின் அடுத்த சுற்று ஆட்டத்தில் விளையாட தயாராக இருக்கின்றார். அந்த வகையில் ஏற்கனவே ரோகித் சர்மா, சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட் ஆகியோர் ரஞ்சி போட்டியில் விளையாட இருக்கின்றனர்.
இவ்வேளையில் விராட் கோலி மட்டும் ரஞ்சி தொடரில் பங்கேற்ற மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக 2012 ஆம் ஆண்டு ரஞ்சி போட்டியில் விளையாடியிருந்த அவர் அதன்பிறகு உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடவில்லை. கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர் சமீபகாலமாக பார்ம் இன்றி தவித்து வருகிறார்.
இதன்காரணமாக அவர் உள்ளூர் தொடரில் விளையாடிவிட்டு மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்று பலரும் பேசி வருகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் இந்த ரஞ்சி சீசனில் தான் கழுத்து வலி காரணமாக விளையாட முடியாது என்று விராட் கோலி அறிவித்திருப்பதாக தெரிகிறது. மேலும் கழுத்து வலிக்கான ஊசியை செலுத்தி கொண்டிருப்பதால் தனக்கு தற்போது ஓய்வு வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளதால் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : அனுதாபம் வந்தாலும்.. சாம்சனை விட இந்த காரணத்தால் ரிஷப் பண்ட் தான் பெஸ்ட் கீப்பர்.. கவாஸ்கர் பேட்டி
இப்படி அணி நிர்வாகத்தின் பேச்சை மீறி உள்ளூர் போட்டியில் விளையாடாத விராட் கோலியின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



