- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இன்னும் 94 ரன்கள் மட்டுமே தேவை.. சச்சினின் மாபெரும் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – விராட் கோலி

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள வேளையில் தொடர்ச்சியாக ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். அதிலும் குறிப்பாக எதிர்வரும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரை தான் விளையாட விரும்புவதாகவும் அவர் வெளிப்படையான அறிவிப்பை வெளியிட்டு தற்போது ஒரு வடிவ போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

சச்சினின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி :

ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரின் முதல் இரண்டு போட்டியில் சொதப்பி இருந்தாலும் கடைசி போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதோடு இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார்.

- Advertisement -

இப்படி அவர் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் உள்ளூர் போட்டிகளிலும் விளையாடும் படி பி.சி.சி.ஐ அவரை கேட்டுக்கொண்டது. அதன்படி பி.சி.சி.ஐ-யின் அந்த கோரிக்கையை ஏற்ற விராட் கோலியும் இந்தியாவில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரிலும் அவர் பங்கேற்று விளையாடி இருந்தார்.

அதோடு எதிர்வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம் பெற்றுள்ளார். அந்தவகையில் இந்த தொடரில் விளையாட இருக்கும் அவர் ஒரு சில குறிப்பிட்ட சாதனைகளை முறியடிக்க காத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக முன்னாள் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்பும் தற்போது அவருக்கு கிடைத்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக மட்டும் 42 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் 46 ரன்கள் சராசரியுடன் 1750 ரன்களை குவித்துள்ளார்.

இதையும் படிங்க : இந்த தைரியமான முடிவெடுத்த அகர்கருக்கு 10க்கு 10 மார்க்.. இந்தியா மறுபடியும் ஜெய்க்கும்.. காரணம் இதான்.. ஹர்பஜன்

அதே வேளையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 33 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 6 சதம் மற்றும் 9 அரைசதம் 1657 ரன்களை குவித்துள்ளார். இதன் காரணமாக எதிர்வரும் இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் மேலும் 94 ரன்கள் மட்டும் அடித்தால் போதும் விராட் கோலி சச்சினின் அந்த சாதனையை முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -