வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. இந்த போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார்.
விராட் கோலி நிகழ்த்தவிருக்கும் மாபெரும் சாதனை :
சர்வதேச கிரிக்கெட்டில் நான்காவது வீரராக அவர் படைக்கப்போகும் சாதனை குறித்த விவரம் வெளியாகி தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இந்த டெஸ்ட் போட்டியில் அவர் 58 ரன்கள் குவிக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் நான்காவது வீரராக 27000 ரன்களை பூர்த்தி செய்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைக்க காத்திருக்கிறார்.
இதுவரை ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி 26942 ரன்கள் குவித்துள்ள அவர் ஒட்டுமொத்தமாக ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து இதுவரை 80 சதம் மற்றும் 140 அரைசதங்களை அவர் விளாசியுள்ளார்.
அதோடு இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 591 இன்னிங்ஸ்களில் விளையாடி தற்போது 27 ஆயிரம் ரன்களை நெருங்கியுள்ளார். இன்னும் ஒன்பது இன்னிங்ஸிற்குள் இந்த 58 ரன்கள் அடித்தால் அதிவேகமாக 27000 ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பம்சம்.
ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை அதிக ரன்கள் அடித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்கள் உடன் முதலிடத்திலும், அவருக்கு அடுத்து குமார் சங்கக்காரா 28,016 ரன்கள் குவித்த இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர். இந்நிலையில் வெகு எளிதாக விராட் கோலி குமார் சங்கக்காராவின் சாதனையையும் தகர்த்து முன்னேறுவார் என்பதில் சந்தேகம் இல்லை.
இதையும் படிங்க : வெற்றி தோல்வி முக்கியமில்லை.. இந்திய அணிக்கு எதிரா எங்களோட இலக்கு இதுதான் – வங்கதேச கேப்டன் பேட்டி
அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலககோப்பை தொடருக்கு பின்னர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற அவர் இன்னும் சில ஆண்டுகள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.



