ஐ.சி.சி வெளியிட்ட ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியல் – முதலிடத்தை இழந்த விராட் கோலி

Kohli

இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் ரன் மழையை பொழிந்து உலகின் நம்பர் ஒன் வீரராக திகழ்ந்து வருகிறார். அதிலும் குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக தரவரிசைப் பட்டியலில் தனது முதலிடத்தை இழக்காமல் இருந்த விராட் கோலி இன்று தனது முதலிடத்தை இழந்துள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை இன்று ஐசிசி வெளியிட்டுள்ளது.

kohli 1

தரவரிசையில் 1258 நாட்களுக்கு பிறகு விராட் கோலி தற்போது தனது முதலிடத்தை இழந்துள்ளார். விராட் கோலிக்கு பதிலாக முதல் இடத்திற்கு முன்னேறியவர் யார் என்று பார்த்தால் நாம் அனைவரும் நினைத்தபடி கோலியோடு அவ்வப்போது ஒப்பிடப்படும் பாகிஸ்தான் அணியை சேர்ந்த பாபர் அசாம் தான். கோலியை விட 8 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று தற்போது பாபர் அசாம் தரவரிசை பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதனால் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு விராட் கோலி தனது முதலிடத்தை இழந்துள்ளார். ஐ.சி.சி. வெளியிட்டுள்ள இந்த புதிய தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த பாபர் அசாம் முதலிடத்திலும், விராட் கோலி இரண்டாவது இடத்திலும் இருக்க மூன்றாவது இடத்தில் ஹிட்மேன் ரோகித் சர்மா தொடர்கிறார்.

அது தவிர மற்றொரு பாகிஸ்தான் வீரரான பக்கர் ஜமான் 5 இடங்கள் முன்னேறி தற்போது டாப் 10க்குள் வந்து எட்டாவது இடத்தை பிடித்துள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான பவுலர்கள் தரவரிசைப் பட்டியலில் நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டிரன்ட் போல்ட் முதலிடத்தில் இருக்கிறார். அதேபோன்று ஆல்ரவுண்டர் வரிசையில் வங்கதேச அணியை சேர்ந்த ஷாகிப் அல் ஹசன் முதலிடத்தில் உள்ளார்.

- Advertisement -

Azam

பாகிஸ்தான் அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி முடித்து உள்ளதால் இந்த தர வரிசை பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வந்த விராட் கோலிக்கு தற்போது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.