2028 ஒலிம்பிக்கில் விளையாடுவீர்களா? ஓய்வுக்குப் பின் எங்கே விளையாடுவீங்க? விராட் கோலி பதில்

Virat Kohli
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரை ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றியுடன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் விடை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் 36 வயதை சராசரியாக தாண்டியுள்ள அவர்கள் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் சர்வதேச 20 ஓவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றனர்.

இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் தாங்கள் தற்போதைய நிலைமையில் ஓய்வு பெறப் போவதில்லை என்று கேப்டன் ரோஹித் சர்மா தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 2027 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு முயற்சிக்க உள்ளதாகவும் அவர் கூறினார். அந்த செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. அதே சமயம் 2027க்குப்பின் விராட், ரோஹித் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடுவதற்கு சாத்தியமில்லை என்றே சொல்லலாம்.

- Advertisement -

2028இல் ஒலிம்பிக்:

ஏனெனில் அப்போது இருவருமே கிட்டத்தட்ட 40 வயதை தொட்டிருப்பார்கள். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் ஓய்வுக்குப் பின் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று விராட் கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அத்துடன் 2028 ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் பல வருடங்கள் கழித்து டி20 வடிவமாக சேர்க்கப்பட்டுள்ளது. எனவே அதில் இந்தியாவுக்காக விளையாட ஓய்வில் இருந்து வருவீர்களா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் ஓய்விலிருந்து மீண்டும் வருவேன் என்று விராட் கோலி கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஓய்வுக்குப் பின் என்ன செய்யப் போகிறோம் என்பது உண்மையாக எனக்கே தெரியவில்லை. சமீபத்தில் எனது சக அணி வீரர் பற்றி கேட்ட போது இதே பதிலைக் கொடுத்தேன்”

- Advertisement -

இந்தியாவுக்காக வருவேன்:

“ஒருவேளை ஓய்வுக்கு பின் நான் நிறைய சுற்றுப்பயணங்கள் செய்யலாம். உலகம் முழுவதிலும் நிறைய லீக் தொடர்கள் நடைபெறுகின்றன. அதில் ஐபிஎல் கண்டிப்பாக பெரிய பங்காற்றும் என்று நினைக்கிறேன். அது ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை ஒரு அங்கமாக கொண்டு வந்துள்ளது. அது எங்களைப் போன்ற சில வீரர்களுக்கு நல்ல வாய்ப்பு”

இதையும் படிங்க: இதுவே போதும்.. அடுத்த சீரிஸ் வேண்டாம்.. தனது டெஸ்ட் எதிர்காலம் குறித்து ஹின்ட் குடுத்த – விராட் கோலி

“ஒருவேளை ஒலிம்பிக் தொடரில் நாங்கள் தங்கப் பதக்கத்துக்காக விளையாடுகிறோம் என்றால் அந்த ஒரு போட்டிக்காக நான் மீண்டும் வந்து விளையாடுவேன். அதில் பதக்கத்தை வென்று மீண்டும் வீட்டுக்கு வந்து விடுவேன். அது சிறந்த விஷயமாக இருக்கும். ஒலிம்பிக் சாம்பியனாக இருப்பது அற்புதமான உணர்வாக இருக்கும்” எனக் கூறினார்.

Advertisement