இதுவே போதும்.. அடுத்த சீரிஸ் வேண்டாம்.. தனது டெஸ்ட் எதிர்காலம் குறித்து ஹின்ட் குடுத்த – விராட் கோலி

Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தற்போது 36 வயதை எட்டியுள்ள வேளையில் ஏற்கனவே டி20 வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்து விட்டார். அதனை தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் அவர் இன்னும் ஒரு சில ஆண்டுகள் விளையாடும் முடிவுடன் தொடர்ந்து தனது பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரானது அவருக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது.

ஓய்வு குறித்து ஹின்ட் கொடுத்த விராட் கோலி :

இதன்காரணமாக எதிர்வரும் டெஸ்ட் தொடர்களில் விராட் கோலியின் நிலை என்ன? என்பது சற்று கேள்விக்குறியாக மாறியது. ஆனாலும் மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இன்னும் சில ஆண்டுகள் விளையாட தான் தகுதியானவன் என்பதை நிரூபித்து இருந்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து ஜூன் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விராட் கோலி விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட இருக்கும் விராட் கோலி கட்டாயம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது.

இந்நிலையில் விராட் கோலி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போது ஓய்வு? என்பது குறித்து மறைமுக கருத்து ஒன்றினை வெளிப்படுத்தி உள்ளார். அது குறித்த விவரம் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் விராட் கோலி ஏற்கனவே அளித்த பேட்டி ஒன்றில் அடுத்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது நான் பங்கேற்காமல் போகலாம்.

- Advertisement -

எனவே முன்பு நடந்தவற்றை நினைத்து மன நிம்மதியுடன் இருக்கிறேன். ஓய்வுக்கு பிறகு நான் என்ன செய்வேன் என்று தெரியவில்லை. ஒருவேளை உலகமெங்கும் பயணிக்கலாம் என்று தெரிவித்திருந்தார். இதன் காரணமாக நிச்சயம் அடுத்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் அணியில் விராட் கோலி செல்ல மாட்டார் என்றும் அடுத்த சில ஆண்டுகளிலேயே அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வினை பெறலாம் என்றும் இதன் மூலம் தெரிகிறது.

இதையும் படிங்க : ரோஹித்தின் வாரிசாக இருந்த பாண்டியாவை பிரிச்சுடாங்க.. இப்போ ரசிகர்கள் மனசார ஏத்துக்குவாங்க.. ஆகாஷ் சோப்ரா

ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிராகவும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் தோல்வி அடைந்த இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு இழந்த வேளையில் அடுத்த சுழற்சிக்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement