இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் தோல்வியை சந்தித்தது. அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிங் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. அந்த தோல்விக்கு சீனியர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் சுமாரான பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்தது.
அதனால் அவர்களை ஓய்வு பெறுமாறு இந்திய ரசிகர்களே விமர்சித்து வருகிறார்கள். அதற்கிடையே அவர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும் என ரஞ்சிக் கோப்பைக்கு சென்று ஃபார்மை மீட்டெடுக்க வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் ஆலோசனை தெரிவித்தனர். அதை ஏற்றுள்ள ரோஹித் சர்மா மும்பைக்காக விளையாடுவதற்கு பயிற்சிகளை தொடங்கியுள்ளார்.
ரஹானே போல:
இந்நிலையில் 2024 – 25 ரஞ்சிக் கோப்பையில் டெல்லி அணிக்காக விராட் கோலியை விளையாட வைக்க உள்ளதாக அம்மாநில வாரியத்தின் தலைவர் ரோகன் ஜேட்லி தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்தியாவுக்காக விளையாடும் வீரர்கள் உள்ளூரில் விளையாடுவது கட்டாயம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதைப் பின்பற்றி விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் டெல்லி அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
மேலும் ரஹானே போன்றவர்கள் இந்தியாவுக்காக விளையாடாவிட்டாலும் தொடர்ந்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடுகிறார்கள். அவர்களைப் பார்த்து விராட் கோலி கற்றுக் கொள்ள வேண்டும் என்று ரோஹன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட், பண்ட் ஆகியோருடைய பெயர்கள் உத்தேச பட்டியலில் இருக்கிறது. ரஞ்சிக் கோப்பைக்கான முகாம் விரைவில் நடைபெற உள்ளது”
டெல்லியின் கிடுக்குப்பிடி:
“அதில் மும்பை வீரர்களிடம் இருந்து உத்வேகத்தை எடுத்துக்கொண்டு டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாட வேண்டும். இந்திய அணிக்காக விளையாடாத போது மும்பை வீரர்கள் எப்போதும் ரஞ்சிக் கோப்பையில் விளையாட தயாராக இருப்பார்கள். ஆனால் டெல்லி அணியில் அதை பார்க்க முடியவில்லை. பிசிசிஐயும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று கட்டாயமாக தெரிவித்துள்ளது”
இதையும் படிங்க: பட் கமின்ஸை வீழ்த்திய ஜஸ்ப்ரித் பும்ரா.. ஐசிசி விருதை வென்று அபாரம்.. ரசிகர்களுக்கு ஒரே ஆறுதல்
“எனவே விராட், பண்ட் குறைந்தது ஒரு போட்டியில் விளையாடுவார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவர்கள் விளையாடுவார்களா என்று எனக்குத் தெரியவில்லை” எனக் கூறினார். அந்த வகையில் கடைசியாக ரஞ்சிக்கோப்பையில் விராட் கோலி 2012ஆம் ஆண்டு விளையாடியிருந்தார். அதன் பின் 12 வருடங்கள் கழித்து அவர் மீண்டும் விளையாடுவதற்கான கிடுக்குப் பிடியை டெல்லி போட்டுள்ளது.



