மீண்டும் கேப்டனாகும் விராட் கோலி எந்த அணிக்கு? எந்த தொடரில் தெரியுமா? – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் தனது கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினார். அதோடு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக கேப்டன்சி செய்து வந்த அவர் அந்த பதிவையையும் வேண்டாம் என டூப்ளிசிஸ்க்கு விட்டுக் கொடுத்தார். அதனை தொடர்ந்து எந்த ஒரு அணிக்கும் கேப்டனாக செயல்படாத அவர் முழுநேரமாக பேட்ஸ்மேனாக மட்டுமே இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது விராட் கோலி மீண்டும் கேப்டனாகும் ஒரு வாய்ப்பு அவர் கைகூடி வந்துள்ளது. இருப்பினும் அந்த கேப்டன்சி பொறுப்பை அவர் ஏற்பாரா? மாட்டாரா? என்பது பொறுத்திருந்து பார்த்தால் மட்டுமே தெரியும்.

- Advertisement -

அந்த வகையில் அண்மையில் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அடுத்த சில மாதங்களுக்கு இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடாத வேளையில் இந்தியாவில் நடைபெற உள்ள துலீப் டிராபி தொடரில் இந்திய வீரர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என கம்பீர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் காரணமாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் துலீப் டிராபி தொடரில் விளையாட இருக்கின்றனர். அந்த தொடரில் இந்தியா ஏ, இந்தியா பி, இந்தியா சி, இந்தியா டி என நான்கு அணிகள் பங்கேற்க உள்ளன.

- Advertisement -

இந்த நான்கு அணிகளுக்கும் இந்திய வீரர்களே கேப்டனாக இருப்பார்கள் என்று தெரிகிறது. அந்த வகையில் ஒரு அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும், மற்றொரு அணியின் கேப்டனாக கில்லும், மற்றொரு அணியின் கேப்டனாக கே.எல் ராகுலும், மீதமுள்ள மற்றொரு அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருப்பார்கள் என்று யூகங்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க : ஐ.பி.எல் ஆணிகளால் சர்வதேச கிரிக்கெட்டிற்கு கண்டிப்பா ஆபத்து வரும் – இயான் சேப்பல் எச்சரிக்கை

இருப்பினும் விராட் கோலி அந்த பதவியை ஏற்பாரா? மாட்டாரா? என்பது அவர் கையிலேயே உள்ளது. வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி துலீப் டிராபி தொடர் துவங்க உள்ளது. அதை தொடர்ந்து இரண்டாம் கட்ட போட்டிகள் செப்டம்பர் 12-ம் தேதி முதல் நடைபெற இருக்கின்றன. இந்த தொடரில் விராட் கோலி பங்கேற்பார் என்பது உறுதி.

Advertisement