உலகளவில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர். டாப் 3 பேரும் இந்திய வீரர்கள் தானாம் – விவரம் இதோ

IND-2

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் அதனைத்தொடர்ந்து சில ஆண்டிகளில் ஒருநாள் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். அனைத்து விதமான போட்டிகளிலும் நம்பர் 1 இடத்தை பிடித்ததுடன் கேப்டனாகவும் பல்வேறு சாதனைகள் படைத்து இருக்கிறார்.

Kohli

இப்படி இவரது பெயர் உலகம் முழுவதும் பிரபலம் ஆனதால் ஆண்டுக்கு சுமார் 200 கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார் விராட் கோலி. மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பல மில்லியன் பாலோவர்களை வைத்துள்ளார் விராட்கோலி. இந்நிலையில் இந்த வருடம் உலகம் முழுவதும் ஆன்லைன் மூலம் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் பட்டியலிலும் இவர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

கிரிக்கெட் அணிகள் பற்றி ஆய்வு நடத்தும் SEMrush இந்த நிறுவனம் ஆன்லைனில் அதிகம் தேடப்பட்ட வீரர்களின் பட்டியலை தயாரித்துள்ளது. இதில் கூகுள், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், அனைத்து வலைதளங்களும் அடங்கும். இதன்படி ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை விராட் கோலியை மாதத்திற்கு சராசரியாக 16.2 லட்சம் முறை மக்கள் தேடி இருக்கிறார்கள்.

Rohith

ரோகித் சர்மா பெயரை 9.7 லட்சம் முறையும் மகேந்திர சிங் தோனியின் பெயரை 9.4 லட்சம் முறையும் தேடியிருக்கிறார்கள். இதில் ஹர்திக் பாண்டியா வின் பெயர், 6.7 இலட்சம் முறையும் சச்சின் டெண்டுல்கர் பெயர் 5.4 லட்சம் முறையும் தேடப்பட்டது. ஆச்சரியமாக இளம் வீரரான ஷ்ரேயாஸ் ஐயரின் பெயரும் 3.4 லட்சம் முறை தேடப்பட்டது.

- Advertisement -

Iyer-1

அணிகளைப் பொருத்தவரை இந்திய அணியை சராசரியாக 2.5 லட்சம் வரை தேடியிருக்கிறார்கள். அதனை தொடர்ந்து இங்கிலாந்து ஆஸ்திரேலியா வெஸ்ட்இண்டீஸ் பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா வங்கதேசம் நியூசிலாந்து இலங்கை அயர்லாந்து ஆப்கானிஸ்தான் சிம்பாவே ஆகிய அணிகளை முறையே .66, .33, .29, .23, .16, .12, .12, .09, .05, .04, and .03 லட்சம் முறை பார்த்திருக்கிறார்கள்.