Virat Kohli : இவர் மனிதனே இல்லை. ஒரு மெஷின் போல இந்திய அணிக்காக ரன்களை குவித்து வருகிறார் – லாரா பேட்டி

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து

Lara
- Advertisement -

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Worldcup

- Advertisement -

இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றடைந்தது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் இப்போதே தொடரை எதிர்கொள்ள தயாராகிவிட்டார்கள்.

இந்நிலையில் இந்திய அணி குறித்தும் உலக கோப்பை தொடர் குறித்தும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணி தற்போது சிறப்பாக ஆடி வருகிறது. அவர்கள் ஆடும் விதத்தைப் பார்க்கும்போது இந்த உலக கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்ற அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

kohli

மேலும் தற்போது இந்திய அணி சமமான அளவிலான வீரர்களை கொண்டுள்ளதால் அவர்களால் எந்த ஒரு சூழ்நிலையிலும் சுதாரித்து ஆட முடியும். எனவே இந்த உலக கோப்பையில் இந்திய அணி பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும் மேலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு சாதாரண வீரரை போன்று ரன்களை குவிக்க வில்லை. ஒரு மனிதரைப் போன்று இல்லாமல் அவர் ஒரு மிஷின் போன்று இந்திய அணிக்காக ரன் குவிக்கும் இயந்திரமாக செயல்பட்டு வருகிறார். இதனால் இந்தத் தொடரிலும் அவர் இந்திய அணிக்காக ரன்களை குவிப்பார். மேலும் இந்த தொடரில் அதிக ரன்கள் குவிக்கும் வீரராகவும் விராத் கோலி திகழ்வார் என்று அவர் கூறினார்.

Advertisement