- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒன்டேவில் கோலி மாதிரி பிளேயரை பாத்ததில்லை.. என்னை மாதிரி சச்சினையும் முந்த வாய்ப்பிருக்கு.. பாண்டிங் பாராட்டு

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. குறிப்பாக பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் 242 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சவாலான ஆடுகளத்தில் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பி சதத்தை அடித்து வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

சமீபத்திய தொடர்களில் சுமாரான ஃபார்மில் இருந்த அவர் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். அதையும் தாண்டி இந்தப் போட்டியில் அசத்திய விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக 14000 ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 3வது அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையையும் அவர் உடைத்தார்.

- Advertisement -

சிறந்த கோலி:

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டின் வரலாற்றில் விராட் கோலி போல ஒரு வீரரை பார்த்ததில்லை என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். மேலும் இப்படியே விளையாடினால் 18426 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கரை முந்தி விராட் கோலி சாதனை படைக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“பெரிய போட்டிகளில் பெரிய வீரர்கள் அசத்துவார்கள் என்று நான் எப்போதும் கூறியுள்ளேன். அது போன்ற பெரிய போட்டிகளில் பெரிய வீரர்கள் உங்களுக்கு எழுந்து நிற்க வேண்டும். இந்தியா – பாகிஸ்தானை விட வேறு பெரிய போட்டி இருக்க முடியாது. சர்வதேச அரங்கில் பெரிய போட்டியில் உங்களுடைய பெயர் ஜொலிக்கும். எனவே விராட் கோலி செய்ததில் எனக்கு ஆச்சரியமில்லை”

- Advertisement -

சச்சினை முந்த வாய்ப்பிருக்கு:

“2022 டி20 உலகக் கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் உயர்ந்து நின்றார். அதே போல பாகிஸ்தானுக்கு எதிராக துபாயில் சவாலான ஆடுகளத்தில் அசத்துவதை விட அவருக்கு சிறந்த வாய்ப்பு கிடைக்காது. டாப் ஆர்டரில் உங்களுக்கு அது போல ஒருவர் விளையாட வேண்டும். நீண்ட காலமாக சாம்பியன் பிளேயராக இருக்கும் 50 ஓவர் கிரிக்கெட்டில் நம்ப முடியாத செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறார்”

இதையும் படிங்க: முதல் மேட்ச்ன்னா இந்நேரம் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்திருக்கும்.. கோலி கம்ப்ளீட் பேக்கேஜ்.. ரமீஸ் ராஜா

“50 ஓவர் கிரிக்கெட்டில் அவரை விட சிறந்த வீரரையும் நான் பார்த்ததில்லை. தற்போது என்னை முந்தியுள்ள அவருக்கு முன்பாக இருவர் மட்டுமே இருக்கிறார்கள். ஃபிட்னஸ் அளவில் நன்றாக இருக்கும் அவர் இன்னும் சச்சினை விட 4000 ரன்கள் பின்தங்கியுள்ளார். நீண்ட காலம் விளையாடிய சச்சினை நீங்கள் முந்துவது கடினம். ஆனால் இதே பசியுடன் விளையாடும் பட்சத்தில் விராட் கோலியை நீங்கள் முடிந்தவராக எழுத முடியாது” என்று கூறினார்.

- Advertisement -