IND vs ENG : ரோஹித் சந்தேகம், இந்தியாவை வழிநடத்த அவர்தான் சரியானவர் – முன்னாள் பாக் வீரர் கருத்து

rohith
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் கடந்த வருடம் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டியில் வரும் ஜூலை 1-ஆம் தேதி இந்தியா களமிறங்குகிறது. கடந்த 2021இல் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை மிரட்டிய விராட் கோலி தலைமையிலான இந்தியா 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்று 15 வருடங்களுக்கு பின் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்க காத்திருந்தது. ஆனால் திடீரென ஏற்பட்ட கரோனா பரவல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட கடைசி போட்டி தற்போது மீண்டும் நடைபெறுகிறது.

rohith 1

இம்முறை ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்தியாவிற்கு இப்போட்டி கடும் சவாலாக அமையப் போகிறது. ஏனெனில் கடந்த முறை ஜோ ரூட் தலைமையில் திண்டாடிய இங்கிலாந்து இம்முறை பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புத்துயிர் பெற்று அதிரடியான வெற்றிகளைக் குவிக்கும் வலுவான அணியாக மாறியுள்ளது. மறுபுறம் இதுவரை வெஸ்ட் இண்டீஸ், இலங்கை போன்ற கத்துக்குட்டிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் மட்டுமே வெற்றிகளை பெற்ற ரோகித் சர்மா முதல் முறையாக வெளிநாட்டில் இந்தியாவை வழி நடத்த உள்ளார்.

- Advertisement -

ரோஹித் சந்தேகம்:
இந்த அனல் பறக்க போகும் போட்டிக்காக ஏற்கனவே இங்கிலாந்து சென்றுள்ள இந்தியா லீசெஸ்டர்ஷைர் கவுண்டி அணிக்கு எதிராக 4 நாட்கள் பயிற்சி போட்டியில் பங்கேற்றது. அதில் கேப்டனாக களமிறங்கிய ரோகித் சர்மா முதல் இன்னிங்சில் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய வரவில்லை. முதலில் காயம் தான் அதற்கான காரணம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு கரோனா ஏற்பட்டுள்ளதால் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார் என்று பிசிசிஐ அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Jasprith Bumrah Rohit Sharma Wisden.jpeg

ஏனெனில் கேப்டனாக அவர் இல்லாமல் போனால் இந்தியாவை வழிநடத்த போவது யார் என்ற மிகப்பெரிய கேள்வி தற்போது எழுந்துள்ளது. போதாக்குறைக்கு கடந்த ஜனவரியில் தென் ஆப்ரிக்க தொடரில் கேப்டன்ஷிப் செய்த கேஎல் ராகுலும் தற்போது காயத்தால் விலகியுள்ளார். எனவே ஒருவேளை ரோகித் சர்மா குணமடையாமல் போனால் ரிஷப் பண்ட் அல்லது ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரில் யாரேனும் ஒருவர் கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் சமீபத்திய தென் ஆப்ரிக்க தொடரில் ரிஷப் பண்ட் கேப்டனாக மொத்தமாக சொதப்பியதால் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக செய்திகள் கூறுகிறது.

- Advertisement -

கிங் கோலி:
இந்நிலையில் ரோகித் சர்மா இல்லாத நிலையில் விராட் கோலி கேப்டனாக செயல்படுவார் என்று யாருமே பேசாமல் இருப்பது தமக்கு ஆச்சரியமளிப்பதாக கூறும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா இப்போட்டியில் ரோகித் இல்லையென்றால் இந்தியாவை அவரைவிட வேறு யாரும் தலைமை தாங்க சரியானவராக இருக்க முடியாது என்று கூறியுள்ளார். இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் கேப்டனாக இருப்பதற்கான முதிர்ச்சியை அடையவில்லை. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கிடைத்த பொன்னான வாய்ப்பில் அவர் மோசமாக செயல்பட்டார். மேலும் கேப்டன்ஷிப் அவரின் பேட்டிங்கில் அழுத்தத்தை ஏற்படுத்தியதால் இனிமேல் அவர் கேப்டனாக செயல்பட கூடாது என்று நான் கருதுகிறேன்”

Kaneria-1

“இந்த சமயத்தில் விராட் கோலியின் பெயர் யாருமே பரிந்துரைக்காதது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. பர்மிங்காம் டெஸ்டில் பண்ட் மற்றும் பும்ரா ஆகியோர் கேப்டன்களாக வாய்ப்புள்ளது. இங்கிலாந்தில் நீண்ட நாட்கள் விளையாடி வரும் புஜாராவும் ரோகித் இல்லை என்றால் அணியை வழி நடத்தலாம். ஆனால் விராட் கோலி மட்டுமே இந்தியாவுக்கான சரியான தீர்வாக இருப்பார். வேறு யாரும் கிடைக்கவில்லையெனில் அவர் இந்தியாவை வழி நடத்தலாம். இருப்பினும் 5-வது போட்டிக்குள் ரோகித் குணமடைவார் என்று நம்புகிறேன். அதேபோல் பும்ராவிடம் கேப்டன்ஷிப் பொறுப்பை கொடுக்க கூடாது. அவர் பந்து வீச்சில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். அதனால் அவர் கேப்டனாவதை நான் விரும்பவில்லை” என்று கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல பொறுப்பேற்றபோது சொந்த மண்ணில் மட்டும் வெற்றி பெறும் அணியாக தர வரிசையில் 7-வது இடத்தில் திண்டாடிக் கொண்டிருந்த இந்தியாவை தனது ஆக்ரோஷம் நிறைந்த அதிரடியான கேப்டன்ஷிப் வாயிலாக உலகின் எந்த இடத்திலும் வெல்லும் அணியாக மாற்றிய விராட் கோலி ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் பல சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார்.

இதையும் படிங்க : சுமாரான பார்ம் எதிரொலி, ஓய்வு பெறப்போகும் இங்கிலாந்து ஸ்டார் வீரர் – வெளியான அதிர்ச்சி தகவல்

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா மட்டுமல்லாது ஆசிய அளவில் வெற்றிகரமான கேப்டன் என்ற மகத்தான சாதனை படைத்த அவர் ஏற்கனவே இத்தொடரில் 4 போட்டிகளில் வழி நடத்தியது போல் இப்போட்டியிலும் இந்தியாவை வழிநடத்த முழுமுதற் தகுதியானவர் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் தாமாக விலகிய அவர் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்பது கடினமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Advertisement