தன்னம்பிக்கை வேற லெவல்.. அதுல மைக்கேல் பெவனை விட விராட் கோலி தான் சிறந்தவர்.. ஆண்டர்சன் பாராட்டு

James anderson 2
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார். 2008இல் அறிமுகமான அவர் இதுவரை 26000க்கும் மேற்பட்ட ரன்களையும் 80 சதங்களையும் குவித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற அவர் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

அதே போல 2017 – 2021 வரை முழுநேர கேப்டனாக செயல்பட்ட அவருடைய தலைமையில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்தது. இந்நிலையில் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை தாண்டி விராட் கோலிக்குள் மகத்தான ஃபினிஷர் இருப்பதாக இங்கிலாந்தின் ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சிறந்த ஃபினிஷர்:

குறிப்பாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் மைக்கேல் பெவனை விட வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விராட் கோலி சிறந்த ஃபினிஷராக செயல்படுவதாக ஆண்டர்சன் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இரண்டாவதாக பேட்டிங் செய்வது மற்றும் இலக்கை சேசிங் செய்வதில் விராட் கோலியை விட வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை”

“சேசிங்கில் அவருடைய ரெக்கார்ட் அற்புதமாக இருக்கிறது. 2வது இன்னிங்ஸில் அவர் அடித்துள்ள சதங்களும் இலக்கை தொட்ட விதங்களும் அபாரமானது. அந்த சூழ்நிலையில் வரும் போது அவருடைய மனப்போக்கு எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பதில் ஆச்சரியமில்லை. அவருடைய தன்னம்பிக்கை அந்தளவுக்கு உயர்ந்துள்ளது. சேசிங் என்ற வார்த்தை வரும் போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிறந்த வெள்ளைப்பந்து பேட்ஸ்மேன் மைக்கேல் பெவன் எனது நினைவுக்கு வருவார்”

- Advertisement -

மைக்கேல் பெவனை விட:

“குறிப்பாக 1990களின் இறுதி மற்றும் 2000களின் துவக்கத்தில் அவர் 6வது இடத்தில் பேட்டிங் செய்து அற்புதமான வேலையை செய்தார். மறுபுறம் 3வது இடத்தில் பேட்டிங் செய்யும் விராட் கோலி நிறைய சதங்கள் அடித்துள்ளார். பெவன் 50, 60 ரன்களை அடித்து போட்டியை முடிப்பார். விராட் கோலி பெரிய ஸ்கோர் அடித்து தனது அணியை வெற்றிக்கோட்டை தாண்ட வைப்பார். உண்மையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விராட் கோலியை விட சிறந்த ஃபினிஷர் இருந்ததாக எனக்கு தெரியவில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க: விராட் கோலி வில்லனா இருப்பாரு.. இந்தியாவுக்கு கொடுத்த லோனை திரும்பி வாங்குவோம்.. ஆஸி வீரர் சவால்

அவர் கூறுவது போல ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை (17) விட சேசிங் செய்த போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரராக விராட் கோலி (27) உலக சாதனை படைத்துள்ளார். தோனியை விட அவர் சிறந்த பேட்டிங் சராசரியையும் கொண்டுள்ளார். இலங்கைக்கு எதிரான 2012 ஹோபார்ட் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி ஆகியவை விராட் கோலியின் ஃபினிஷிங் திறமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

Advertisement