விராட் கோலி வில்லனா இருப்பாரு.. இந்தியாவுக்கு கொடுத்த லோனை திரும்பி வாங்குவோம்.. ஆஸி வீரர் சவால்

James anderson 2
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ள 2024/25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. கடைசியாக 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2 டெஸ்ட் தொடர்களையும் இந்தியா வென்றது. அதனால் சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் 21ஆம் நூற்றாண்டில் அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களை வென்ற ஒரே அணியாக இந்தியா உலக சாதனை படைத்துள்ளது.

அந்த வரிசையில் தற்போது ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஆனால் கடந்த 2 தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இந்தியாவை இம்முறை ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் என்று ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட் போன்ற முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர்.

- Advertisement -

வில்லன் விராட் கோலி:

இந்நிலையில் விராட் கோலியை ஆஸ்திரேலிய ரசிகர்கள் எப்போதுமே வில்லனாக பார்ப்பார்கள் என்று முன்னாள் வீரர் ஜெஃப் லாசன் கூறியுள்ளார். அதே சமயம் விராட் கோலி சிறப்பாக விளையாடினால் ஆஸ்திரேலியர்கள் சத்தமாக கைதட்டி பாராட்டுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 2014 முதல் இந்தியாவுக்கு கடனாக கொடுத்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இம்முறை ஆஸ்திரேலியா திரும்பப் பெறும் என்றும் லாசன் சவால் தெரிவித்துள்ளார்.

இது பற்றி மிட்-டே பத்திரிகையில் அவர் கூறியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ராவின் விருப்பமான இயல்பாக இல்லாமல் விராட் கோலி வில்லனாக இருப்பார். வேகப்பந்து வீச்சாளராக பாக்கியம் பெற்ற பும்ராவுக்கு ஃபைன் லெக்கில் ஃபீல்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். அங்கே அவர் ஆஸ்திரேலிய ரசிகர்களுடன் உரையாடி, புன்னகையையும் இதயங்களையும் வெல்வார்”

- Advertisement -

கடன் கொடுத்திருக்கோம்:

“விராட் கோலி இன்ஃபீல்டிங்கில் பதுங்கியிருந்து சத்தமாக முறையிட்டு பிரமாதமாக ஃபீல்டிங் செய்வார். ஏதேனும் ஆஸ்திரேலிய வீரருடன் காரசாரமாக உரையாடுவார். ஆஸ்திரேலிய ரசிகர்கள் விராட் கோலியை ஒரு போட்டியாளராக விரும்புவார்கள். கண்டிப்பாக அவர் 50, 100 ரன்கள் அடிக்கும் போது ஆஸ்திரேலிய ரசிகர்கள் சத்தமாக பாராட்டுவார்கள். 13 வருடத்திற்கு முன்பு வந்ததிலிருந்தே வேகத்துக்கு சாதகமான ஆஸ்திரேலிய சூழ்நிலைகள் விராட் கோலிக்கு பொருத்தமாக இருக்கிறது”

இதையும் படிங்க: ரவீந்திர ஜடேஜா சி.எஸ்.கே அணியை விட்டு வெளியேறினால் நிச்சயம் அந்த அணிக்காக தான் விளையாடுவாராம் – விவரம் இதோ

“ஆனால் 2024ஆம் ஆண்டும் ஆஸ்திரேலிய பவுலர்களை சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் அதேக் கூர்மை அவரிடம் இருக்குமா? என்பது கேள்வியாகும். எனவே அவரை கணக்கில் வைக்க மாட்டேன். பிசிசிஐக்கு கடந்த 2 தசாப்தங்களாக கடனாக கொடுத்திருந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையை மீண்டும் ஆஸ்திரேலிய தலைமையகத்தில் வைக்கும் நேரம் வந்து விட்டது. ஆஸ்திரேலியா டெஸ்ட் சாம்பியனாக இருக்கலாம். ஆனால் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் தொடரை வெல்லாதது அந்த மகுடத்தை நிலையாக வைத்திருக்காது” என்று கூறினார்.

Advertisement