ஐ.பி.எல் போட்டிகளில் 500 பவுண்டரிகளை அடித்த விராட் கோலி. இவருக்கு முன்னதாக இந்த சாதனையை செய்தவர் – யார் தெரியுமா ?

Kohli

ஐபிஎல் தொடரின் 39 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை மட்டுமே குவித்தது.

RCBvsKKR

துவக்க வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன் பின்னர் எந்த இடத்திலுமே கொல்கத்தா அணியால் சிறப்பாக விளையாட முடியவில்லை. அதிகபட்சமாக மோர்கன் 30 ரன்களையும், லோகீ பெர்குசன் 19 ரன்களை குவித்தனர். பெங்களூரு அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பெங்களூரு அணியின் சிறப்பான பந்துவீச்சால் கொல்கத்தா அணி சுருண்டது என்றே கூறலாம்.

அதன் பின்னர் 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா பெங்களூரு அணி 13.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 85 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் படிக்கல் 25 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் குர்கீரத் சிங் 21 ரன்களும், விராட் கோலி 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணியின் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

rcb

இந்த போட்டியில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி 17 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரிகளுடன் 18 ரன்களை அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 500 பவுண்டரிகளை அடித்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற சாதனையை கோலி பெற்றிருக்கிறார். இந்நிலையில் இதற்கு முன்னரே ஐபிஎல் தொடரில் 500 பவுண்டரிகளை விளாசிய வீரர் குறித்த விவரம் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

- Advertisement -

dhawan 1

அந்த வகையில் டெல்லி அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் ஏற்கனவே 500 பவுண்டரிகளை ஐபிஎல் தொடரில் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது 547 பவுண்டரிகள் அடித்து அவர் ஐபிஎல் தொடரில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஷிகார் தவான் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.