அந்த 3 பேரையும் இம்ப்ரெஸ் பண்ண ரியான் பண்ண மேட்ச் வின்னரா வருவாரு.. வாழ்த்திய விராட் கோலி

Virat Kohli
- Advertisement -

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அந்தத் தொடரின் முதல் போட்டியிலேயே வெற்றியை கோட்டை விட்ட இந்தியா சமன் செய்தது. ஆனால் இரண்டாவது போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்தியா 3வது போட்டியில் இன்னும் மோசமாக விளையாடி 110 ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வியை சந்தித்தது.

அதனால் 27 வருடங்கள் கழித்து முதல் முறையாக இலங்கைக்கு எதிராக ஒரு இருதரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. முன்னதாக அந்தத் தொடரின் 3வது போட்டியில் இளம் வீரர் ரியான் பராக் இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பை பெற்றார். 2019 ஐபிஎல் தொடரில் சுமாராக விளையாடிய அவர் இந்த வருடம் ராஜஸ்தான் அணியில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

வாழ்த்திய கோலி:
அதனால் கடந்த இலங்கை டி20 தொடரில் அறிமுகமான அவர் பந்து வீச்சில் சிறப்பாக விளையாடி வெற்றியில் பங்காற்றினார். அதன் காரணமாக தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிலும் அறிமுகமான அவருக்கு விராட் கோலி அறிமுகத் தொப்பியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது கேப்டன் ரோஹித், பயிற்சியாளர் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அகர்கர் ஆகியோரை நீங்கள் கவர்ந்துள்ளதாக விராட் கோலி பாராட்டினார்.

அத்துடன் வருங்காலத்தில் இந்தியாவின் மேட்ச் வின்னராக வரும் திறமை உங்களிடம் இருப்பதாகவும் விராட் கோலி அவரை பாராட்டினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரியான் இந்தியாவுக்காக முதல் போட்டியில் விளையாடுவதற்காக வாழ்த்துக்கள். இன்றைய கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளைத் தாண்டி பொறுப்பான தேர்வாளர்கள் உங்களிடம் ஏதோ ஸ்பெஷலான திறமை இருப்பதை பார்த்துள்ளனர்”

- Advertisement -

“குறிப்பாக கௌதம் கம்பீர் பாய், ரோஹித் மற்றும் தேர்வாளர்கள் உங்களிடம் ஏதோ ஸ்பெஷலாக பார்த்துள்ளனர். இந்தியாவின் மேட்ச் வின்னராக வரும் திறன் உங்களிடம் இருக்கிறது. அந்த நம்பிக்கை உங்களிடம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். உங்களை நான் நீண்ட காலமாக பார்த்து வருகிறேன். இத்தொடரில் 1 – 0 என்ற கணக்கில் நாம் பின்தங்கியிருக்கும் இந்த சூழ்நிலையை விட உங்களுடைய சர்வதேச கேரியரை துவக்க வேறு நல்ல வாய்ப்பு கிடைக்காது”

இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக முரளிதரன் கூட செய்யாத உலக சாதனை படைத்த வெல்லலாகே.. தொடர்நாயகனாக பேட்டி

“அதில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்துங்கள். தொப்பி நம்பர் 256 ரியான் பராக் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்” என்று கூறினார். அப்படி விராட் கோலியின் கையில் தொப்பியை வாங்கி அறிமுகமான பாராக தனது முதல் போட்டியிலேயே பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதே போல பேட்டிங்கிலும் அதிரடியாக விளையாட முயற்சித்த அவர் 15 (13) ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement