மோடி, தோனிக்கு சவால் விடுத்த விராட் கோலி..! – சவாலை தோனி ஏற்றாரா..?

kholi
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் பிட்டகா இருக்கும் விராட் கோலி, பல்வேறு உடற்பயிற்சிகளை செய்துவருகிறார். மேலும் தனது உடலை மிகவும் சௌகர்யமாக வைத்துக்கொள்ள அவர் செய்யும் பல பயிற்சி விடீயோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்து, அதனை வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் விராட் கோலி ,பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவல், பாலிவுட் நடிகர் ஹிர்த்திக் ரோசன் ஆகியோரை டேக் செய்துள்ளார்.

அந்த பதிவியில் நீங்கள் எப்படி உங்கள் உடலை பிட்டாக வைத்திருக்கிறீர்கள் என்று வீடியோ பதிவிடுங்கள் என்று டேக் செய்த அவர்கள் மூவருக்கும் சவால் ஒன்றை விடுத்திருந்தார். இதனைக்கண்ட விராட் கோலி அவரது சவாலை ஏற்று ட்விட்டரில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் “நான் ரத்தோர் விடுத்த பிட்னஸ் சவாலை ஏற்றுக் கொண்டேன். நான் தற்போது என்னுடைய மனைவி அனுஸ்கா, பிரதமர் மோடி, மற்றும் தோனி ஆகியோருக்கு இந்த சவாலை விடுகிறேன் ” என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Advertisement