கே.எல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி தம்பதிக்கு விராட் கோலி அளித்த திருமண பரிசு – என்ன தெரியுமா?

KL-Rahul-and-Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரரான கே.எல் ராகுல் கடந்த சில ஆண்டுகளாகவே பிரபல பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டியின் மகளும், நடிகையுமான அதியா ஷெட்டியை காதலித்து வந்தார். இந்திய அணி எந்த நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் ராகுலுடன் பயணிக்கும் அவர் அவ்வப்போது வெளியிடங்களுக்கு சென்று அவர்கள் ஒன்றாக கழிக்கும் நேரங்களை புகைப்படமாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவிடுவார். அப்படி அவர்கள் பகிர்ந்த புகைப்படங்களுக்கு எல்லாம் இணையத்தில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.

Athiya-KL-Rahul

- Advertisement -

அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு தாங்கள் இருவரும் காதலிப்பதை உறுதி செய்த கே.எல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி ஜோடி விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்கள். அதன்படி நடைபெற்று முடிந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று இருந்த கே.எல் ராகுல் அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகினார்.

மேலும் இந்த இடைவெளியில் திருமணம் செய்து கொள்வதற்காகவே விடுப்பு எடுத்து இருந்தார். அதன்படியே கடந்த ஜனவரி 23-ஆம் தேதி திங்கள்கிழமை அவர் காண்டலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் வைத்து அதியா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார். மிகவும் கோலாகலமாக நடைபெற்ற கே.எல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி ஆகியோறது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 70 பேர் மட்டுமே கலந்து கொண்டனர் என்று கூறப்பட்டுள்ளது.

KL-Rahul-and-Kohli

பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ராகுல் பங்கேற்க இருப்பதால் விரைவாக இந்திய அணியில் அவர் இணைகிறார். மேலும் அதற்கு அடுத்து ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாட இருப்பதால் ஐபிஎல் தொடர் முடிந்து தனது நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவருக்கும் மும்பையில் வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றினையும் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் புதுமணத் தம்பதிகளான ராகுல் மற்றும் அதியா திருமணத்திற்கு வந்தவர்கள் விலை மதிப்பில்லா பல பரிசுகளை வழங்கி உள்ளனர். அதில் தற்போது விராட் கோலி அவருக்கு வழங்கியிருக்கும் ஒரு பரிசு குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் எப்பொழுதுமே கே.எல் ராகுலை ஆதரித்து வரும் விராட் கோலி இம்முறை அவர்களது கல்யாண பரிசாக இந்திய மதிப்பில் சுமார் 2 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பில் உள்ள BMW காரனை பரிசாக வழங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க : தமிழகத்துக்கு எதிராக மாஸ் காட்டிய ரவீந்திர ஜடேஜா – இந்திய அணியில் கம்பேக் உறுதியா? விவரம் இதோ

அதோடு சுனில் ஷெட்டியின் நெருங்கிய நண்பரான சல்மான் கான் 1 கோடியே 64 லட்சம் மதிப்புள்ள ஆடி காரை பரிசாக வழங்கியுள்ளார். அதேபோன்று சுனில் செட்டி 50 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வீட்டை அவர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளார். இப்படி கோடிகளின் மதிப்பிலான பல பரிசுப் பொருட்கள் புதுமணத் தம்பதிகளுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement