முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் முன் விராட் கோலிக்கு நேர்ந்த சோகம் – வெளியான தகவல்

Kohli
- Advertisement -

எதிர்வரும் நவம்பர் 22-ஆம் தேதி பெர்த் நகரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே இரண்டு குழுக்களாக பிரிந்து ஆஸ்திரேலியா சென்றடைந்து தற்போது அங்கு நடைபெற்று வரும் பயிற்சியில் தீவிரமாக கலந்து கொண்டு விளையாடி வருகிறது. ரோகித் சர்மா மட்டும் இன்னும் இந்த ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியுடன் இணையாமல் இருப்பதால் அவர் முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

விராட் கோலிக்கு ஏற்பட்டுள்ள காயம் :

இதன் காரணமாக தொடரின் ஆரம்பத்திலேயே இந்திய அணி பின்னடைவை சந்தித்துள்ள வேளையில் தற்போது வீரர்களின் பார்ம் கவலைக்கிடமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்திய அணியின் செயல்பாடு இந்த தொடரில் எவ்வாறு இருக்கப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியில் அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ள வீரர்கள் அடுத்தடுத்து காயத்தில் சிக்கி வருவது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கே.எல் ராகுல் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் வேளையில் தற்போது இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான விராட் கோலி பயிற்சியின்போது காயத்தில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளது. இதன் காரணமாக முதல் போட்டியில் அவர் விளையாடுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அந்த வகையில் பயிற்சியின் போது அடைந்த காயம் காரணமாக தற்போது விராட் கோலி ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டு இருக்கிறார் என்றும் அந்த ஸ்கேன் எதற்காக எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இதன் காரணமாக அவரது காயத்தின் தன்மை எவ்வாறு இருக்கிறது? என்கிற கேள்வியும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 6 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்த விராட் கோலி மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தினார். அது மட்டுமின்றி இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதுமே இரண்டு சதங்களை மட்டுமே விளாசியுள்ள அவர் 31% சராசரியுடன் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க : ரஞ்சிக் கோப்பை: ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்ஸ்.. அனில் கும்ப்ளே போல 38 வருடத்துக்கு பின் அரிதான சாதனை

ஏற்கனவே டி20 வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் அவர் இந்த ஆஸ்திரேலிய தொடரில் சொதப்பும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவும் வாய்ப்புள்ளதாக பலரும் பேசி வரும் வேளையில் இப்படி அவர் காயமடைந்துள்ளது அவருக்கு பெரிய பின்னடைவு ஏற்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement