ரஞ்சிக் கோப்பை 2024 – 25 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதில் ஹரியானா மற்றும் கேரளா அணிகள் மோதும் எலைட் குரூப் சி பிரிவின் ஒரு போட்டி நவம்பர் 13ஆம் தேதி ரோஹ்டக் நகரில் துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற ஹரியானா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதை அடுத்து களமிறங்கிய கேரளா அணிக்கு தமிழக வீரர் பாபா அபாரஜித்தை டக் அவுட்டாக்கிய அன்சுல் கம்போஜ் மறுபுறம் நிதானமாக விளையாடிய குன்னும்மாலை 55 ரன்கள் அவுட்டாக்கினார். அடுத்ததாக நிதானமாக விளையாடிய அக்ஷய் சந்திரன் 59, சச்சின் பேபி 52 ரன்களில் அவருடைய வேகத்திலேயே அவுட்டாகி சென்றார்கள். அதோடு நிற்காத கம்போஜ் அடுத்து வந்த சல்மான் நிசார் 0, ஜலஜ் சக்சேனா 4 ரன்களில் அவுட்டாக்கினார்.
10 விக்கெட்ஸ்:
அதே போல லோயர் மிடில் ஆர்டரின் அசாருதீன் 53, சௌன் ரோஜர் 42 ரன்கள் அடித்து சவாலை கொடுத்தார்கள். அவர்களையும் அவுட்டாக்கிய கம்போஜ் அதற்கடுத்ததாக வந்த வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்தார். அந்த வகையில் கேரள அணியின் 10 விக்கெட்டுகளையும் அன்சுல் கம்போஜ் 30.1 ஓவரில் 49 ரன்கள் கொடுத்து எடுத்தார்.
இதன் மூலம் ரஞ்சிகோப்பையில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் எடுத்த மூன்றாவது வீரர் என்ற அரிதான சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 1956 – 57 தொடரில் பிரேமங்சு சேட்டர்ஜி பெங்கால் அணிக்காக ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட் எடுத்துள்ளார். கடைசியாக பிரதீப் சுந்தரம் 1985 – 86 தொடரில் விதர்பாவுக்கு எதிராக ராஜஸ்தான் அணிக்காக 10 விக்கெட் எடுத்தார்.
அரிதான சாதனை:
அவருக்குப் பின் தற்போது 39 வருடங்கள் கழித்து அன்சுல் கம்போஜ் இந்த அரிதான வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அது போக முதல் தர கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் எடுத்த ஆறாவது இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் பிரேமங்சு சேட்டர்ஜி, டெபாசிஸ் மொகான்டி, அனில் கும்ப்ளே, பிரதீப் சுந்தரம், சுபாஷ் குப்தே ஆகியோர் இந்த சாதனை படைத்துள்ளனர்.
இதையும் படிங்க: எல்லா இந்திய பவுலர்களும் எனக்கு அத்துப்படி.. பும்ராவை அடிக்க இந்த பிளான் வெச்சுருக்கேன்.. கவாஜா பேட்டி
அவருக்கு சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் அவருடைய அற்புதமான ஆட்டத்தால் கேரளா அணியை 291 ரன்களுக்கு ஹரியானா ஆல் அவுட் செய்தது. அடுத்ததாக ஹரியானா அணி பேட்டிங் செய்து வருகிறது.



