டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி படைக்க இருக்கும் மாபெரும் சாதனை – 3 ஆவது வீரராக உச்சம் தொடவுள்ள கோலி

Kohli
- Advertisement -

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் துவங்கியுள்ள டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணியானது நாளை ஜூன் 5-ஆம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாட இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ஏற்கனவே வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற பயிற்சி போட்டியின் போது வெற்றி பெற்ற இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் நிச்சயம் இந்த தொடரானது இந்திய அணிக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 தொடரில் விளையாட உள்ள இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இந்த தொடரில் விளையாட இருப்பதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார்.

அந்த வகையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் அவர் 265 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் மட்டும் 13 ஆயிரம் ரன்களை அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்த இருக்கிறார். கடந்த 2007 ஆம் ஆண்டு அறிமுகமான விராட் கோலி அனைத்து வகையான டி20 போட்டிகளில் சேர்த்து :

- Advertisement -

இதுவரை 391 போட்டிகளில் விளையாடி 12,735 ரன்களை குவித்துள்ளார். மேலும் இவர் 265 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் 13000 ரன்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். அதே போன்று உலக அளவில் டி20 கிரிக்கெட்டில் 13,000 ரன்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி நிகழ்த்த காத்திருக்கிறார்.

இதையும் படிங்க : பிடிக்கிற மாதிரி டீமை செலக்ட் பண்ணனும்னு அவசியமில்ல.. தனது இந்திய பிளேயிங் லெவனை வெளியிட்ட கவாஸ்கர்

இவருக்கு முன்னதாக கிரிஸ் கெயில் 463 போட்டிகளில் விளையாடி 14562 ரன்களையும், பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 542 போட்டிகளில் விளையாடி 13360 ரன்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement