நான் பொய் சொல்லல.. சொன்னதை யாருமே கேட்கல.. பிசிசிஐ முடிவு பற்றி ஸ்ரேயாஸ் ஐயர் வருத்தம்

Shreyas Iyer
- Advertisement -

ஐபிஎல் 2024 தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி மே 26ஆம் தேதி சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. அதில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த வருடம் கொல்கத்தா அணி ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் சிறப்பாக விளையாடி ஃபைனல் வந்துள்ளது. ஏற்கனவே 2020 சீசனில் டெல்லியை ஃபைனலுக்கு அழைத்து வந்த முதல் கேப்டனாக சாதனை படைத்த அவர் கொல்கத்தா அணியிலும் அசத்தி வருகிறார்.

முன்னதாக கடந்த 2023 உலகக் கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றிய ஸ்ரேயாஸ் ஐயர் 2024 இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார். அந்தத் தொடரில் காயத்தை சந்தித்து பாதியிலேயே வெளியேறிய அவர் விரைவாக குணமடைந்ததாக என்சிஏ அறிக்கை கொடுத்தது. அதனால் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு பிசிசிஐ அறிவுறுத்தியது.

- Advertisement -

யாருமே கேட்கல:
ஆனால் அப்போது தம்முடைய காயம் முழுமையாக குணமடையாததால் தமிழ்நாட்டுக்கு எதிரான செமி ஃபைனலில் தம்மால் விளையாட முடியாது என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார். இருப்பினும் என்சிஏ அறிக்கை வழங்கியதால் பொய் சொல்வதாக கருதிய பிசிசிஐ அவரை 2023 – 24 இந்திய கிரிக்கெட் அணியின் சம்பள ஒப்பந்தத்திலிருந்து அதிரடியாக நீக்கியது.

அதைத் தொடர்ந்து விதர்பாபுக்கு எதிராக நடைபெற்ற ஃபைனலில் அவர் மும்பை அணிக்காக விளையாடி சாம்பியன் பட்டத்தையும் வென்றார். அதனால் மீண்டும் அவர் இந்திய அணியின் மத்திய சம்பளம் ஒப்பந்தத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார் என்று பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் காயமடைந்துள்ளேன் என்ற உண்மையை சொல்லியும் யாரும் தம்முடைய வேதனையை கேட்கவில்லை என்று ஸ்ரேயாஸ் ஐயர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “உறுதியாக உலகக் கோப்பை முடிந்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட நான் தடுமாறினேன். அது பற்றி நான் கவலை எழுப்பிய போது யாருமே அதைக் கேட்டு ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த சமயத்தில் எனக்கு நானே போட்டியிட்டுக் கொண்டேன். ஐபிஎல் தொடர் வந்த போது என்னை நானே முன்னோக்கி வைக்க விரும்பினேன்”

இதையும் படிங்க: 23 ரன்ஸ்.. ஆர்ச்சர் அபார கம்பேக்.. 8க்கு 8.. இங்கிலாந்திடம் வரலாறு தெரியாமல் பாகிஸ்தான் பரிதாப தோல்வி

“கொல்கத்தா அணிக்காக எந்த திட்டத்தை நாங்கள் வகித்தாலும் அதை எங்களுடைய சிறந்த திறமையை வைத்து செயல்படுத்த முயற்சிக்கிறோம். எனவே கோப்பையை வெல்வதற்கு தகுந்த இடத்தில் நாங்கள் இருக்கிறோம். டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி முடிந்ததும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக மாறுவது பேட்ஸ்மேன்களுக்கும் பவுலர்களுக்கும் கடினமாகும். அதை துவங்குவது கடினமாக இருந்தாலும் ஒருமுறை துவங்கி விட்டால் நீங்கள் மற்ற வீரர்களுடன் ஈடு கொடுத்து விளையாட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement