IND vs ENG : விராட் கோலி இப்படி 1 ரன்னில் ஆட்டமிழக்க இந்த ஒரு விஷயம் தான் காரணமா? – முடிவுக்கு வரும் கரியர்

kohli 1
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 170 ரன்களை குவிக்க அடுத்ததாக 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. ஆனால் இம்முறையும் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 17 ஓவர்களின் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ரன்களை மட்டுமே குவித்ததால் 49 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு அபார வெற்றியை இந்திய அணி பெற்றது.

IND vs ENG Rohit Sharma Yuzvendra Chahal

- Advertisement -

இந்நிலையில் முதலாவது டி20 போட்டியின் போது ஓய்வில் இருந்த சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்பியதால் இன்றைய போட்டியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சீனியர் வீரருமான விராத் கோலி இந்த போட்டியில் விளையாடியதால் அவருக்கு பதிலாக சிறப்பாக விளையாடி வந்த தீபக் ஹூடா அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த போட்டியில் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை விளையாடினால் மட்டுமே இனி வரும் போட்டியில் அவர் இடத்தை உறுதி செய்ய முடியும் என்று கூறப்பட்ட வேளையில் இன்றைய போட்டியிலும் 3 பந்துகளில் 1 ரன் எடுத்து அவர் ஆட்டம் இழந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏனெனில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் மூன்று முறை டக் அவுட் ஆன கோலி ஸ்டிரைக் ரேட்டிலும் பெரிய சரிவினை சந்தித்திருந்தார். இந்நிலையில் 5 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச t20 போட்டியில் விளையாடிய கோலி இப்படி 1 ரன்னில் ஆட்டம் இழந்தது அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் இப்படி சொற்ப ரன்னில் ஆட்டம் இழக்க அவரது இடத்தின் மேல் உள்ள அழுத்தம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் விராட் கோலிக்கு பதிலாக சமீபத்தில் மூன்றாம் இடத்தில் களமிறங்கிய இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Virat-Kohli

அதிலும் குறிப்பாக அண்மையில் இந்திய அணியில் இணைந்து விளையாடி வரும் தீபக் ஹூடா அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் முதல் போட்டியின் போது 47 ரன்களும், இரண்டாவது போட்டியின் போது சதம் அடித்தும் அசத்தியிருந்தார். மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் கூட மூன்றாவது இடத்தில் களமிறங்கிய அவர் 33 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

இப்படி தன்னுடைய இடத்தில் வரும் வீரர்கள் எல்லாம் சிறப்பாக விளையாடி வரும் வேளையில் அணியில் தனது இடத்தை தக்க வைக்க வேண்டும் எனில் அதிரடியாக விளையாடி ஒரு பெரிய ரன் குவிப்பை வழங்க வேண்டும் என்கிற பிரஷரின் காரணமாகவே இன்றைய போட்டியில் ஒரு ரன்னில் அவர் தூக்கி அடித்து ஆட்டம் இழந்தார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட்டில் சரிவினை சந்தித்து வரும் கோலி இப்படியே இன்னும் ஒரு சில போட்டிகளில் விளையாடினால் கூட அவர் டி20 கிரிக்கெட்டில் இருந்து வெளியேற்றப்படவும் அதிக வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : வெளியானது இந்தியாவின் மேலும் ஒரு புதிய கிரிக்கெட் தொடர் – எங்கே, எப்போது, முழுவிவரம் இதோ

ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் உட்பட கிரிக்கெட் நிபுணர்கள் பலரும் விராட் கோலியின் மோசமான ஃபார்ம் குறித்தும், அவரை நீக்க வேண்டும் என்பது குறித்தும் வெளிப்படையாக பேச ஆரம்பித்த வேளையில் இப்படி கோலி மோசமாக விளையாடி வருவது அவருடைய டி20 கிரிக்கெட் கரியரையும் முடிவுக்கு கொண்டு வரும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement