விராட் கோலி இந்தவொரு தப்பை மட்டும் செய்ஞ்சா அவரோட இடம் காலிதான் – புதிதாக வந்த பிரச்சனை

kohli
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகவே சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடிக்காமல் இருந்து வருவது அவர் மீது பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு கடந்த பல ஆண்டுகளாகவே அவரது தலைமையில் விளையாடி வந்த இந்திய அணி ஐசிசி நடத்தும் தொடர்களை கைப்பற்ற முடியவில்லை என்பதன் காரணமாக அவர் மூன்று விதமான கேப்டன் பதவியில் இருந்தும் வெளியேறினார். அதனை தொடர்ந்து ஒரு முழு நேர பேட்ஸ்மேனாக விளையாடி வரும் விராட் கோலி நிச்சயம் தனது பழைய பார்மிற்கு மீண்டு வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இதுவரை அவரால் தனது பழைய ஆட்டத்திற்கு திரும்ப முடியவில்லை.

ஐபிஎல் தொடரிலாவது மீண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஐபிஎல் தொடரிலும் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராத் கோலி தற்போது ஐந்து மாதங்களுக்குப் பிறகு இந்திய அணியின் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறார். எதிர்வரும் உலகக்கோப்பை தொடருக்காக தற்போது இந்திய அணி தீவிரமாக தயாராகி வரும் வேளையில் இன்னும் அவர் தனது முழுமையான ஆட்டத்திற்கு திரும்பாததால் விராட் கோலியின் இடம் தற்போது ஆபத்தில் உள்ளது.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் விராட் கோலி ரன் குவிக்க சொதப்பினால் நிச்சயம் அவரது இடத்தை இழக்கும் அபாயத்தில் அவர் உள்ளார். ஏனெனில் தொடர்ச்சியாக ரன் அடிக்க திணறிவரும் விராட் கோலி இந்த இங்கிலாந்து தொடரிலும் ரன்களை குவிக்க திணறும் பட்சத்தில் அவருக்கு பதிலாக அந்த இடத்தில் விளையாட ஏகப்பட்ட வீரர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

குறிப்பாக அண்மையில் அயர்லாந்து அணிக்கு எதிராக சதம் அடித்த தீபக் ஹூடா இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இப்படி தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் ரன்களை குவிக்கும் அவர் இந்திய அணியில் தனது நிரந்தர இடத்திற்காக போராடி வருகிறார்.

- Advertisement -

அதேபோன்று இந்திய அணியின் மூன்றாவது இடத்திற்கான வாய்ப்புக்காக ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ராகுல் திரிப்பாதி போன்ற பல இளம் வீரர்கள் வரிசை கட்டி நிற்கின்றனர் எனவே இங்கிலாந்து அணிக்கு எதிராக கடைசி 2 போட்டியில் விராட் கோலி மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழுக்கும் அந்த தவறினை செய்தால் நிச்சயம் அவரது டி20 இடத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியில் இருந்து முற்றிலுமாக வெளியேறுகிறாரா ஜடேஜா? – நடப்பதெல்லாம் பாத்தா அப்படிதான் தெரியுது

ஏற்கனவே தொடர்ச்சியாக ரன் குவிக்க திணறிவரும் விராட் கோலி குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வரும் வேளையில் விராட் கோலியின் இந்த நிலையில்லா ஆட்டம் அவரது இடத்திற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு அவரது இடத்திற்கு வேறொரு இளம்வீரரை கொண்டுவரலாம் என்ற விவாதத்தையும் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement