சி.எஸ்.கே அணியில் இருந்து முற்றிலுமாக வெளியேறுகிறாரா ஜடேஜா? – நடப்பதெல்லாம் பாத்தா அப்படிதான் தெரியுது

Jadeja
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரும், சிஎஸ்கே அணியின் முன்னணி வீரருமான ஜடேஜா இந்திய அணிக்காக மட்டுமின்றி சி.எஸ்.கே அணிக்காகவும் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என மூன்றிலும் அசத்தும் திறமை உடையவர். தோனிக்கு அடுத்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக பார்க்கப்பட்ட ஜடேஜாவிற்கு இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. தோனிக்கு அடுத்து சிஎஸ்கே அணியை வழிநடத்தப்போவது ஜடேஜா தான் என்று அறிவிக்கப்பட்டவுடன் ரசிகர்களுக்கு அது மகிழ்ச்சியான செய்தியாக தான் அமைந்தது.

ஆனால் அப்படி ஜடேஜா கேப்டனாக அறிவிக்கப்பட்ட போதுதான் அனைத்து பிரச்சினையுமே ஆரம்பித்தது. ஆம் ஜடேஜாவின் கேப்டன்சியில் 8 போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே அணி 6 தோல்விகளை பெற்றதால் அப்போதே அவரது கேப்டன்சி மீது சர்ச்சை ஏற்பட ஆரம்பித்தது. பின்னர் தொடர் தோல்விகளால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக ஜடேஜா கேப்டன் பதவியில் இருந்து விலகி மீண்டும் தோனியிடம் கேப்டன் பதவி வழங்கினார்.

- Advertisement -

ஆனால் தொடர்ந்து அணியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் காயம் காரணமாக அவர் தொடரின் பாதியில் வெளியேறியது அணி நிர்வாகத்திற்கும் அவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு விட்டதா என்று யோசிக்க வைத்தது. அதோடு ஜடேஜாவிற்கும் நிர்வாகத்திற்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது உண்மைதான் என்ற ஒரு தகவலும் வெளியாகியது.

அதோடு சிஎஸ்கே அணியிலிருந்து அவர் வெளியேறியதும் எழுந்த சர்ச்சை இன்று வரை தீரவில்லை. இந்நிலையில் அந்த பிரச்சனையை உறுதி செய்யும் விதமாக தற்போது ஜடேஜா தனது instagram பக்கத்தில் செய்துள்ள ஒரு செயல் அனைவரையும் குழப்பம் அடைய வைத்துள்ளது. அந்த வகையில் கடந்த 2021/2022 ஆம் ஆண்டுகளில் உள்ள ஐபிஎல் பதிவுகளை அவர் முற்றிலுமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.

- Advertisement -

சிஎஸ்கே அணியில் அவர் இருக்கும்படி இருந்த புகைப்படங்கள் அனைத்தையுமே அவர் நீக்கி உள்ளார். இதனால் சிஎஸ்கே அணியில் இருந்து அவர் வெளியேறுகிறாரோ என்ற எண்ணத்தை நமக்கு அளித்துள்ளது. அதேபோன்று நேற்று முன்தினம் தோனி தனது 41-வது பிறந்த நாளை கொண்டாடிய வேளையில் உலகெங்கிலும் இருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. தோனியுடன் விளையாடிய, அவருடன் பழகிய நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இதையும் படிங்க : IND vs ENG : இங்கிலாந்து அணிக்கெதிரான 2 ஆவது டி20 போட்டியின் இந்திய அணியின் – பிளேயிங் லெவன் இதுதான்

ஆனால் ஜடேஜா மட்டும் தோனிக்கு எந்த ஒரு வாழ்த்தினையும் தெரிவிக்கவில்லை. இப்படி சிஎஸ்கே நிர்வாகம் மற்றும் தோனி ஆகியோருடன் ஜடேஜாவிற்கு இருக்கும் மனக்கசப்பு இந்த இரண்டு விடயங்கள் மூலம் தெளிவாகியுள்ளது. இதன் காரணமாக 2023 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ஜடேஜா சிஎஸ்கே அணிக்காக விளையாடுவாரா? அல்லது அணியில் இருந்து வெளியேறுகிறாரா? என்ற சந்தேகத்தை எழவைத்துள்ளது. இது குறித்து உங்களது கருத்து என்ன?

Advertisement