ஐசிசி 2024 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை தொட்டியுள்ளது. அதில் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றில் அசத்திய இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இத்தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் அயர்லாந்து, அமெரிக்கா, பாகிஸ்தானை தோற்கடித்தது.
அதைத்தொடர்ந்து சூப்பர் 8 சுற்றிலும் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா இதுவரை தோல்வியை சந்திக்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது. குறிப்பாக உண்மையான பரம எதிரியான ஆஸ்திரேலியாவை கடைசி சூப்பர் 8 போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவில் வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து ஜூன் 27ஆம் தேதி இங்கிலாந்தை தங்களுடைய செமி ஃபைனல் போட்டியில் இந்தியா சந்திக்கிறது.
யுவராஜ் மாதிரி:
அப்போட்டியில் வென்று ஃபைனலுக்கு தகுதி பெற்று இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 2011 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் போல இத்தொடரில் ஹர்திக் பாண்டியா சிறந்த ஆல் ரவுண்டராக செயல்பட்டு இந்தியா கோப்பையை வெல்ல உதவுவார் என்று ஸ்ரீசாந்த் கணிப்பையும் நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சந்திப்பில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் வெற்றிக்கான சாவியாக இருப்பார் என்று ரோஹித் சர்மா தெரிவித்தார். 2011 உலகக் கோப்பையில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் ஆல் ரவுண்டராக யுவராஜ் சிங் என்ன செய்தாரோ அதை இந்த உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா செய்வதற்கான திறமையை கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன்”
“எனவே இந்த உலகக் கோப்பையை ரோகித் சர்மா தூக்கினால் நாம் யாரும் ஆச்சரியப்படக் கூடாது என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறினார். அவர் கூறுவது போல ஐபிஎல் 2024 டி20 தொடரில் சுமாராக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா மும்பையின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். அதனால் சொந்த ரசிகர்களால் ஹர்திக் பாண்டியா கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தார்.
இதையும் படிங்க: அந்த 8வது அதிசயத்தை பாக்கனும்.. கலாய்த்த இயன் ஸ்மித்.. காயம் பற்றி அஸ்வினுக்கு பதிலளித்த குல்பதின் நைப்
ஆனால் இந்த தொடரில் இதுவரை 116 ரன்கள் அடித்துள்ள அவர் 8 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 27* (17) ரன்கள் அடித்த அவர் இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார். எனவே தொடர்ந்து சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்தால் பாண்டியாவை கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.



