இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விராட் கோலி செயல்பட்டு வருகிறார். கடந்த 16 வருடங்களாக இந்தியாவுக்காக விளையாடி வரும் அவர் 26,000 ரன்கள் மற்றும் 80 சதங்கள் அடித்து நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். அதே போல கேப்டனாகவும் அவருடைய தலைமையில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றது.
அதை விட ஆரம்பக் காலங்களில் கொஞ்சம் பருமனாக இருந்த விராட் கோலி நாளடைவில் கடினமாக உழைத்து தம்முடைய உடலை கட்டுக்கோப்புடன் வைத்துள்ளார். அதை பயன்படுத்தி வெற்றிகரமாக விளையாடும் அவர் இந்தியா மட்டுமின்றி உலக கிரிக்கெட்டில் ஃபிட்னஸ் எனும் வார்த்தைக்கு அடையாளமாக திகழ்கிறார். அத்துடன் இந்திய அணியில் ஃபிட்டாக இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்கும் என்ற நிலையை கேப்டனாக இருந்த போது விராட் கோலி கொண்டு வந்தார்.
எவ்வளவு திமிர்:
இந்நிலையில் இந்திய அணியில் மிகவும் ஃபிட்டான கிரிக்கெட்டர் யார் என்று சமீபத்திய பேட்டியில் ஜஸ்ப்ரித் பும்ராவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் விராட் கோலியை சொல்வார் என்று தொகுப்பாளர் எதிர்பார்த்த நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா தம்முடைய பெயரையே பதிலாக கொடுத்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் தற்போது நீண்ட காலமாக விளையாடி வருகிறேன்”
“ஒரு வேகப்பந்து வீச்சாளராக இந்திய நாட்டில் நிலவும் வெப்பத்தில் விளையாடுவதற்கு நிறைய திறன் தேவைப்படுகிறது. எனவே நான் எப்போதும் வேகப்பந்து வீச்சாளர்களை பிரமோட் செய்ய விரும்புகிறேன். அந்த வகையில் நான் என்னுடைய பெயரை எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறினார். ஆனால் அதைப் பொறுத்துக் கொள்ளாத விராட் கோலி ரசிகர் எவ்வளவு திமிராக இருந்தால் இப்படி சொல்வார்? என்று ட்விட்டரில் பும்ராவை விமர்சித்து வருகிறார்கள்.
இதெல்லாம் ஒரு பிரச்சனையா:
ஏனெனில் விராட் கோலி ஃபிட்னஸ்க்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். மறுபுறம் ஜஸ்ப்ரித் பும்ரா 2022 – 2023 காலகட்டங்களில் அதிகப்படியான காயங்களை சந்தித்து தடுமாறினார். எனவே உங்களை எப்படி ஃபிட்டான வீரர் என்று சொல்லிக் கொள்கிறீர்கள்? என விராட் கோலி ரசிகர்கள் பும்ராவை ட்விட்டரில் விமர்சித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: கென்யாவில் முன்னாள் இந்திய வீரருக்கு நேர்ந்த அவமானம்.. ஒரே மாதத்தில் பறிக்கப்பட்ட பொறுப்பு.. காரணம் என்ன?
அதை பார்க்கும் பொதுவான இந்திய ரசிகர்கள் இதெல்லாம் ஒரு பிரச்சனையா? என்று அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். சொல்லப்போனால் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரக்கூடிய வீரர் என்று 2024 டி20 உலகக் கோப்பை வெற்றி விழாவில் விராட் கோலி வெளிப்படையாக பாராட்டினார். அதையும் இந்தியாவுக்காக ஒன்றாக விளையாடுகிறார்கள் என்பதையும் மறந்து விட்டு விராட் கோலி ரசிகர்கள் இப்படி பும்ராவை விமர்சிப்பது கண்மூடித்தனமானது என்றால் மிகையாகாது.



