IND vs AUS : இந்த மாதிரி ஒருதலைபட்ச நடுவரை தூக்குங்க, இந்திய அம்பயருக்கு விராட் கோலி ரசிகர்கள் போர்க்கொடி

Virat Kohli DRS
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்தது. அந்த நிலைமையில் மார்ச் 1ஆம் தேதியன்று இந்தூரில் துவங்கிய 3வது போட்டியில் வென்று குறைந்தபட்சம் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து தங்களது நம்பர் ஒன் இடத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியாவை முதல் நாளிலேயே அதிகமாக சுழன்ற பிட்ச்சை பயன்படுத்தி தரமாக பந்து வீசி வெறும் 109 ரன்களுக்கு சுருட்டியது.

ரோஹித் சர்மா 12, புஜாரா 1, ஷ்ரேயஸ் ஐயர் 0 உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மேத்தியூ குனேமான் 5 விக்கெட்களை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா மார்னஸ் லபுஸ்ஷேன் 31, உஸ்மான் கவாஜா 60, ஸ்டீவ் ஸ்மித் 26 என முக்கிய வீரர்களின் நல்ல ரன் குவிப்பால் முதல் நாள் முடிவில் 156/4 ரன்கள் எடுத்து இந்தியாவை விட 47 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை எட்டியுள்ளது.

- Advertisement -

மோசமான அம்பயர்:
முன்னதாக இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு மிட்சேல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே இந்திய கேப்டன் ரோகித் சர்மா எட்ஜ் கொடுத்ததை அவுட் கொடுக்க மறுத்த நடுவர் நிதின் மேனன் அதே ஓவரில் எல்பிடபுள்யூ முறையில் ஆஸ்திரேலியா அவுட் கேட்ட போதும் நியாயமான தீர்ப்பை வழங்கவில்லை. அதை ஆஸ்திரேலியா சந்தேகத்தால் ரிவ்யூ எடுக்க தவறிய காரணத்தால் தப்பிய ரோகித் சர்மா அந்த அதிர்ஷ்டத்தை பயன்படுத்தாமல் அவுட்டானது வேறு கதை. அதே போல் ரவீந்திர ஜடேஜா மற்றும் சில ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கூட அவர் சில தருணங்களில் சாதகமாக நடந்து கொண்டார்.

இருப்பினும் அதே நடுவர் சுழலுக்கு சாதகமாக பேட்டிங்க்கு சவாலாக இருந்த பிட்ச்சில் சிறப்பாக பேட்டிங் செய்து 22 ரன்கள் எடுத்த விராட் கோலி எட்ஜ் கொடுத்த போது ஒரு வினாடி கூட தாமதிக்காமல் உடனடியாக அவுட் கொடுத்தார். அதை ரிவியூ எடுத்தும் விராட் கோலி தப்ப முடியாதது வேறு கதை. ஆனால் டெல்லியில் நடைபெற்ற கடந்த போட்டியில் ஒரே சமயத்தில் பந்து பேட் மற்றும் கால்களை உரசிய தருணத்தில் எல்பிடபிள்யூ முறையில் இதே அம்பயர் விராட் கோலிக்கு அவுட் கொடுத்திருந்தார்.

- Advertisement -

ஆனால் ஒரே சமயத்தில் பேட் மற்றும் கால்களை பந்து உரசும் போது முதலில் பந்து பேட்டில் பட்டதாக தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது அடிப்படை விதிமுறையாகும். அதை தெரிந்தும் அவுட் கொடுத்த அவர் இந்த போட்டியில் ஒரே ஓவரில் ஒன்றுக்கு 2 முறை ரோகித் சர்மா தெளிவாக அவுட் என்று தெரிந்தும் ஒரு தலைப்பட்சமாக அவுட் கொடுக்கவில்லை என்று விராட் கோலி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆதாரத்துடன் விமர்சித்து வருகிறார்கள்.

மேலும் இந்த போட்டி மட்டுமல்லாது சமீப காலங்களாகவே விராட் கோலிக்கு எதிராக யோசிக்காமல் நிதின் மேனன் அவுட் கொடுப்பதை வழக்கமாக வைத்திருப்பதாக அவரது ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அது போக கடந்த வருட ஐபிஎல் தொடரில் இடுப்புக்கு மேலே வந்தும் நோபால் கொடுக்காததால் ரிஷப் பண்ட் கடுப்பாகி தனது அணி வீரர்களை உள்ளே அழைத்தது உட்பட சமீப காலங்களில் சாதாரணமாகவே நிறைய போட்டிகளில் இந்த நடுவர் குளறுபடியான முடிவுகளை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதையும் படிங்க:டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை சமன் செய்த உமேஷ் யாதவ் – நம்ப முடியலையா அப்போ இதை படிங்க

எனவே நீதியின் தராசு போல சரிசமமாக இருக்க வேண்டிய நடுவரின் இடத்தில் இப்படி ஒருவர் அதுவும் இந்தியாவைச் சேர்ந்தவராக இருப்பது அவமானத்தை அளிப்பதாக தெரிவிக்கும் இந்திய ரசிகர்கள் இவரைப் போன்றவர்களை பதவி நீக்கம் செய்யுமாறு சமூக வலைதளங்களில் போர்கொடி உயர்த்தியுள்ளனர்.

Advertisement