நியூசிலாந்து அணிக்கெதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் இமாலய சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – விராட் கோலி

Virat Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி ஏற்கனவே வடோதரா நகரில் ஜனவரி 11-ஆம் தேதி நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

2 ஆவது போட்டியில் விராட் கோலி நிகழ்த்த காத்திருக்கும் சாதனை :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது ஜனவரி 14-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி மாபெரும் சாதனை ஒன்றினை ஒருநாள் போட்டிகளில் நிகழ்த்த காத்திருக்கிறார்.

- Advertisement -

அது குறித்த தகவல் வெளியாகி தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் விராட் கோலி நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இதுவரை தான் கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளிலும் 50+ ஸ்கோரை அடித்துள்ள விராட் கோலி இரண்டாவது போட்டியில் மேலும் ஒரு அரைசதத்தை அடித்தால் 6 போட்டிகளில் தொடர்ச்சியாக 50+ ரன்களை குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.

ஏற்கனவே இந்திய அணி சார்பாக சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், ரோகித் சர்மா மற்றும் அஜின்க்யா ரகானே ஆகியோர் 5 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 50+ ரன்களை அடித்திருந்த வேளையில் விராட் கோலி தற்போது அதே நிலையுடன் சமநிலையில் உள்ளார்.

- Advertisement -

உலகளவில் தொடர்ச்சியாக அதிக 50+ ஸ்கோரை அடித்த வீரர்களின் பட்டியலில் ஜாவித் மியான்தத் 9 முறை 50+ ஸ்கோருடன் முதலிடத்திலும், இன்சமாம் உல் ஹக் 7 முறை 50+ ஸ்கோருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். ஒருவேளை அடுத்த போட்டியில் விராட் கோலி ஆறாவது முறையாக 50+ ஸ்கோரை அடிக்கும் பட்சத்தில் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்த வயசுலயும் விராட் கோலி இப்படி அடிச்சு நொறுக்க இதுவே காரணம் – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து

விராட் கோலி கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 156 சராசரியுடன் 469 ரன்களை குவித்துள்ளார். இதில் இரண்டு சதம் மற்றும் மூன்று அரைசதம் அடங்கும்.

Advertisement