இந்த வயசுலயும் விராட் கோலி இப்படி அடிச்சு நொறுக்க இதுவே காரணம் – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து

Ashwin and Kohli
- Advertisement -

டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தற்போது விளையாடி வரும் வேளையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்று கூறப்பிடுகிறது. தற்போது ஒரு வடிவ போட்டிகளில் மட்டுமே விராட் கோலி விளையாடி வருவதால் எதிர்வரும் ஒவ்வொரு தொடருமே அவருக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது.

விராட் கோலி அசத்த இதுவே காரணம் : ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து

இருந்தாலும் அவர் நடைபெற்று வரும் அனைத்து தொடர்களிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உச்சகட்ட பார்மில் இருக்கிறார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த தொடரில் தொடர் நாயகன் விருதினை வென்று அசத்தியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் :

- Advertisement -

301 ரன்கள் என்கிற இலக்கினை துரத்துகையில் மூன்றாவது வீரராக களமிறங்கிய அவர் 91 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 93 ரன்கள் குவித்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். என்னதான் 7 ரன்களில் அவர் சதத்தை தவற விட்டிருந்தாலும் அவரது இந்த இன்னிங்ஸ் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

அதோடு அவரது இந்த சிறப்பான இன்னிங்சின் மூலம் அவர் சில சிறப்பான சாதனைகளையும் நிகழ்த்தி இருந்தார். இந்நிலையில் விராட் கோலியின் இந்த அட்டகாசமான ஃபார்மிற்கு என்ன காரணம்? என்பது குறித்து சில கருத்துக்களை முன்னாள் இந்திய வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிப்படுத்தி உள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

- Advertisement -

என்னை பொறுத்தவரை விராட் கோலி தற்போது அவரது டெக்னிக்கில் ஏதாவது மாற்றங்களை செய்துள்ளாரா? என்று கேட்டால் அவர் எதையும் செய்யவில்லை என்று நான் கூறுவேன். ஏனெனில் அவர் தற்போது தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கிறார். எனவே இனிவரும் போட்டிகளை ரசித்து விளையாட வேண்டும் என்று விரும்பியே சுதந்திரமாகவும் தனது சிறுவயதில் எவ்வாறு விளையாடினாரோ அதேபோன்று அதிரடியாக விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க : இந்தியா – நியூஸிலாந்து 2வது ஒன்டே நடக்கும் ராஜ்கோட் மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

இத்தனை ஆண்டு கால அனுபவம் மற்றும் அவரது மனவலிமை காரணமாகவே இந்த அளவிற்கு இயல்பாக விளையாடுகிறார். அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியையுமே ரசித்து விளையாடுகிறார். இதுபோன்ற ஃபார்ம் இருக்கும்போது நிச்சயம் இனி வரும் ஆட்டங்களிலும் அவர் அற்புதமான ரன் குவிப்பை தொடர்வார் என்றும் அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement