இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் முதலாவதாக நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. வதோதராவில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்த இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அதனால் புத்தாண்டை வெற்றிகரமாக துவங்கிய இந்திய அணி அதே வேகத்தில் 2வது போட்டியிலும் வென்று ஆரம்பத்திலேயே தொடரைக் கைப்பற்ற தயாராகியுள்ளது.
மறுபுறம் முதல் போட்டியில் 49 ஓவர்கள் வரை இந்தியாவுக்கு சவாலைக் கொடுத்த நியூஸிலாந்து போராடி தோற்றது. எனவே 2வது போட்டியில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக விளையாடி இந்தியாவை தோற்கடித்து தொடரை சமன் செய்து பதிலடி கொடுக்க நியூஸ்லாந்து தயாராகியுள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2வது போட்டி ஜனவரி 14ஆம் தேதி சௌராஷ்டிராவில் இருக்கும் ராஜ்கோட் நகரில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு துவங்குகிறது.
ராஜ்கோட் மைதானம்:
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இருக்கும் பால்கனியைப் போன்ற தோற்றத்துடன் 2009இல் உருவாக்கப்பட்ட இம்மைதானம் 28000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இம்மைதானத்தில் 2013 முதல் நடைபெற்ற 4 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள இந்தியா 1 வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. 3 தோல்விகளை சந்தித்துள்ள இந்தியா முதல் முறையாக இம்முறை நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
வெதர் ரிப்போர்ட்:
ராஜ்கோட் நகரில் ஜனவரி 14ஆம் தேதி மழை பெய்வதற்கான வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. வெப்பம் 13 – 27 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று தெரிய வருகிறது. அதனால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.
பிட்ச் ரிப்போர்ட்:
ராஜ்கோட் மைதானத்தின் பிட்ச் வரலாற்றில் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்ததற்கு வருகின்றது. இங்கு நல்ல, வேகம் பவுன்ஸ் இருக்கும் என்பதால் அதைப் பயன்படுத்தி பொறுப்புடன் விளையாடும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்கலாம். எனவே பவுலர்கள் விக்கெட்டுகளை எடுப்பதற்கு சிறப்பாக பந்து வீசுவது அவசியமாகும்.
இதையும் படிங்க: அங்க பாரு என் டூப்ளிகேட் சீக்குன்னு ரோஹித்திடம் சொன்னாரு.. விராட் கோலியை பார்த்தது பற்றி சிறுவன் பேட்டி
மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் வழக்கமான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். வரலாற்றில் இங்கு நடைபெற்ற போட்டிகளில் 4 போட்டிகளில் 352, 340, 325 என 3 முறை 300க்கும் மேற்பட்ட ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் இங்கு நடைபெற்ற 4 போட்டிகளிலுமே முதலில் பேட்டிங் செய்த அணிகள் 4க்கு 4 வெற்றி பெற்றுள்ளன. எனவே இப்போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்த 300க்கும் மேற்பட்ட ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.



