- Advertisement -
ஐ.பி.எல்

ஐ.பி.எல் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் மாபெரும் சாதனையை சமன் செய்த விராட் கோலி – விவரம் இதோ

ஆர்.சி.பி மற்றும் கே.கே.ஆர் அணிகளுக்கு இடையேயான நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 57-வது லீக் போட்டியானது நேற்று ராய்ப்பூர் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது எட்டாவது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது.

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த விராட் கோலி :

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய ஆர்.சி.பி அணியானது 19.1 ஓவரிலேயே 4 விக்கெடுகளை மட்டும் இழந்து 194 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் அசத்தலாக இருந்தது. பெங்களூரு அணியை பொருத்தவரை இந்த போட்டியில் அதிகபட்சமாக அவர் 60 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என ஆட்டமிழக்காமல் 105 ரன்கள் குவித்து ஆர்.சி.பி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் காரணமாக நேற்றைய போட்டிக்கான ஆட்டநாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று பெற்ற இந்த விருதின் மூலம் ரோகித் சர்மாவின் மாபெரும் சாதனை ஒன்றினை அவர் ஐ.பி.எல் போட்டிகளில் சமன் செய்து அசத்தியுள்ளார். அந்த வகையில் விராட் கோலி நிகழ்த்திய சாதனை யாதெனில் :

- Advertisement -

இதையும் படிங்க : இந்த சீசனில் தோனி பார்ப்பது கஷ்டம் தான் போல.. லக்னோ செல்ல மறுத்த தோனி – காரணம் என்ன?

இதுவரை ஐ.பி.எல் போட்டிகளில் அதிகமுறை ஆட்டநாயகன் விருதினை வென்ற இந்திய வீரராக ரோஹித் சர்மா 21 ஆட்டநாயகன் விருதுகளுடன் முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் பெற்ற ஆட்டநாயகன் விருதின் மூலம் விராத் கோலியும் ஐ.பி.எல் போட்டிகளில் தனது 21-வது ஆட்டநாயகன் விருதினை பெற்று ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -