டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை அசால்டாக சமன் செய்த விராட் கோலி – விவரம் இதோ

Dhoni

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 329 ரன்கள் குவிக்க இங்கிலாந்து அணி 134 ரன்களை மட்டுமே குவித்தது. இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் சதம் மூலமாக இந்திய அணி 286 ரன்கள் குவித்தது. இதனால் இங்கிலாந்து அணி 482 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் விளையாடி 318 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Ashwin

இந்த வெற்றியின் மூலம் முதலாவது டெஸ்ட் போட்டியில் கிடைத்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுத்துள்ளது. மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தேர்வாக முக்கிய போட்டியாக பார்க்கப்பட்ட இந்த போட்டியை வென்று தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான அடுத்த இருபோட்டிகளும் இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீது அதிகளவு விமர்சனம் எழுந்தது. அதுமட்டுமின்றி அவரின் கேப்டன் பதவியை ரஹானேவிடம் விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் குரல் எழுந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் மீண்டும் விராட் கோலி தனது பலத்தை நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Ind-lose

மேலும் இந்த போட்டியின் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு முக்கியமான சாதனை ஒன்றை இந்திய மண்ணில் நிகழ்த்தியுள்ளார். அந்த சாதனை யாதெனில் இதுவரை இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்திய மண்ணில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்த கேப்டன் என்ற சாதனையை தோனி வைத்திருந்தார். இந்தியாவில் தோனியின் தலைமையில் இந்திய அணி சொந்த மண்ணில் 21 வெற்றிகளை பதிவு செய்திருந்தது.

- Advertisement -

Dhoni

அதனை தொடர்ந்து தற்போது இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் விராட் கோலியும் இந்திய மண்ணில் 21 வெற்றிகளைப் பெற்று அவரது சாதனையை சமன் செய்துள்ளார். மொத்தம் 33 போட்டிகளில் தலைமை தாங்கி உள்ள விராட் கோலி அதில் 21 வெற்றிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.