பாகிஸ்தானை துவைத்து எடுத்ததன் மூலம் மேலும் ஒரு சச்சினின் சாதனையை சமன் செய்த விராட் கோலி – விவரம் இதோ

KohliandSachin
- Advertisement -

துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முக்கிய லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மற்றும் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.

சச்சினின் சாதனையை சமன் செய்த விராட் கோலி :

இதன்மூலம் இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. அதோடு நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி வாய்ப்பையும் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி 111 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

இதன் காரணமாக விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. நேற்று அவர் அடித்த சதத்தின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 51 வது சதத்தை பதிவு செய்த அவர் பல்வேறு சாதனைகளை இந்து சதத்தின் மூலம் நிகழ்த்தி இருந்தார்.

அந்த வகையில் 14,000 ரன்களை விரைவாக அடித்த சர்வதேச வீரர் மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஐசிசி தொடர்களில் அதிக ஆட்டநாயகன் விருதினை வென்ற வீரர் என்ற சாதனைகளை நிகழ்த்தியிருந்தார். மேலும் ஐ.சி.சி சச்சினின் ஒரு சாதனையை சமன் செய்துள்ளார். அந்த வகையில் அவர் படைத்த சாதனை யாதெனில் :

- Advertisement -

இதுவரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி மூலம் நடத்தப்படும் தொடர்களில் சச்சின் 23 முறை 50 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். அந்த சாதனையை நேற்று சதம் அடித்த விராட் கோலி சமன் செய்துள்ளார். சச்சின் மொத்தமாக 58 ஐசிசி போட்டிகளில் விளையாடி 23 முறை 50 ரன்களை கடந்துள்ளார். அதே வேளையில் விராட் கோலி 51 இன்னிங்ஸ்களே அந்த சாதனையை சமன் செய்திருக்கிறார்.

இதையும் படிங்க : பாகிஸ்தானின் அந்த கனவை இந்தியா உடைச்சுட்டாங்க.. அதிக தைரியத்தையும் ஒத்துகிறேன்.. ரிஸ்வான் வருத்தமான பேட்டி

அடுத்தடுத்து இன்னும் சில ஐசிசி தொடர்களில் விராட் கோலி பங்கேற்க இருக்கிறார் என்பதனால் சச்சினின் அந்த சாதனையை கடக்கவும் விராட் கோலிக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் இதுவரை ஐசிசி தொடரின் போது 14 முறை ஆட்டநாயகன் விருததினையும் விராட் கோலி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement